தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium



- 314 -
 
ஆதரம் பண்ணல் போகத் தஞ்சினர் நெஞ்சி னஞ்சாய்
 
மாதவன் சரண மாக வனமது துன்னி னாரே. 

(இ-ள்.) மாதவன் - சுதத்த முனிவர், மலர்ந்த சொல்லால் - திருவாய் மலர்ந்து அருளிய உரையால், மைந்தனும்-அபயருசியும், மங்கைஆய பேதை  அம் பிணைஅனாளும் -அபயமதியும், பிறப்பு - தங்கள் பழம்பிறப்பு வகைகளை, இனிது - நன்றாக, உணர்ந்த பின்னர் - --, நெஞ்சில் - தம்மனத்தில், போகத்து ஆதரம் பண்ணல் - போகப்பொருள்களினிடத்து விருப்பங் கொள்ளுதலை, நஞ்சாய் அஞ்சினர் - விஷயமாகக் கருதி அஞ்சினவர்களாய், மாதவன் சரணம் ஆக - அந்த முனிவரையே தமக்குப் புகலாகக் கருதி, வனம் அதுதுன்னினார் - (அம்முனிவரரிருந்த) வனத்தை நண்ணினார்.

இளைஞர் துறவு மேற்கொள்ள வனம் ஏகின ரென்க.

பேதை - அறிந்தும் அறியாததுபோல் இருக்குந்தன்மை.  பேதையாய மங்கை என்க.  மங்கை, பருவப்பெயர். பிணையனாள் - பெண்மான் பார்வைபோலும் மருண்ட பார்வையுடையாள்.  மாதவன் - சிறந்த தவத்தோன்:  சுதத்தாசார்யர் ‘நல்வினை விளையு ளென்னு நஞ்சு‘ (சீவக, 2985) என்பதை ஈண்டு ஒப்பு நோக்குக. துன்னுதல் - சேர்தல்.                   (87)

307. 
வினைகளும் வினைக டம்மால் விளைபயன் வெறுப்பு மேவித்
 
தனசர ணணையு ளார்க்குத் தவவர சருளத் தாழ்ந்து
 
வினையின விளைவு தம்மை வெருவின மடிகள் மெய்யே
 
சினவரன் சரண மூழ்கிச் செறிதவம் படர்து மென்றார்.

(இ-ள்.) (இளைஞ ரிருவரும்), வினைகளும் வினைகள் தம்மால் விளைபயன் - வினைகளும் அவ்வினைகளால் விளையும் பயனும் ஆகிய இவைகளில், வெறுப்பு மேவி - வெறுப்படைந்து, தனசரண் அணையுளார்க்கு - தன் பாதங்களையே ஆதாரமாகவுடைய சங்கங்களுக்கு, தவ அரசு அருள - தவ வேந்தராகிய சுதத்தமுனிவர் அறவுரை புகலுங்கால் (அங்குச் சென்று), தாழ்ந்து - வணங்கி, அடிகள் - எம்பெருமானே ! வினையின விளைவு தம்மை வெருவினம் - வினைகளினுடைய  துன்பப் பயன்களை அஞ்சினோம், மெய்யே




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 11:35:35(இந்திய நேரம்)