தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மதிப்புரைகள்


சிவமயம்
 

மதிப்புரைகள்

திருவாவடுதுறை யாதீனம் ஸ்ரீமத் - நமசிவாயத் தம்பிரான் சுவாமிகள்
 
மகாபுருஷ செல்வச் சிரஞ்சீவி நமது சுப்ரமண்ய முதலியாரவர்களுக்கு
சுவாமி அம்பலவாண சுவாமி கிருபையால் சகல சம்பத்தும் மென்மேலும்
பெருக உண்டாக ஆசீர்வாதம்.
 

திருவருளால் இவண் சுபம். தங்கள் க்ஷேமத்தையறியப்
பேரவாவுடையேம். தாங்களனுப்பிய பெரியபுராணவுரை வந்து சேர்ந்தது.
சொற்சுவை பொருட்சுவைகளை ஆர அருந்தி இன்புறுகின்றோம். தமிழ்
உலகிற்கு ஓர் பெரும் விருந்தே.


சூரியனார் கோயிலாதீனம்

ஸ்ரீமத் - முத்துக்குமாரத் தம்பிரான் சுவாமிகள் அருளிய  

ஆசியுரை
 

பொன்னலரிதழி யணிசடைக் கூத்தர் புனிதவாய் மலர்ந்தருள் செய்த
மன்னரு "ளுலகெ லா"மெனு முதலே மருவிட முதலிடை கடையும்
துன்னக விருடீர்ந் துயிரெலாம் வாழத் தூயசெந் தமிழ்க்குறை நீங்கப்
பன்னருந் தெய்வச் சேக்கிழார் பெருமான் பாடிய திருத்தொண்டர் புராணம். 1

வாழிமா மறையின் மெய்ப்பய னாகி வளர்பெருஞ் சைவசித் தாந்தக்
கேழிலா நெறியி னநுபவப் பேறு கிடைத்துய ரளவிலாப் பெரியார்
பாழிமால் விடையோ னருள்வழிப் படர்ந்த பண்பொடு சரிதமும் விரித்தே
ஆழியா ரமுதின் மிகுசுவை யுடைத்தா யருந்தவர் விருந்துமா யினதே. 2

உரைத்தவர் நூலின் பெருமையா ருணர்வா ரோங்குமா பதியுமா பதியாய்த்
தரைத்தவ முடைய ததியினோர் தேறத் தருவர லாறுபெற் றிலமேல்;
திரைத்தரு கடலிற் கலசமார் முறைதாந் தேர்ந்தவா றுரைகண்முன் பல்லோர்
உரைத்தனரிந்நாண் மாக்களு மந்நூற் குரைதம துளத்துள துரைத்தார். 3

திருத்தகு தெய்வச் சேக்கிழார் பெருமான் றிருவுளச் சம்பிர தாயக்
கருத்திது வென்று காட்டிமேற் கோளும் கவின்பெறு சொற்பொரு ணயமும்
தெரித்துமெய்ச் சைவ நெறிமுறை விளக்கிச் சிலர்சிறு நெறியுரை மறுத்தே
அருத்தியி னறிஞ ரேற்குநல் லுரையீ தன்பினா லளித்தன னம்மா. 4

அப்பெருந் தகைதா னாரெனிற் கோவைக் கணிமணி விளக்கென வோங்கும்
சுப்பிர மணிய முதலியார், பீ.ஏ., எனும் பெயர்த் தூயவன் சைவ
முப்பெருந் தீக்கை பெற்றரு ணூவின் மொழிசிவ பூசனை புரிவோன்;
இப்பரி சன்பர் பிறரையும் புரிவித் திறையருட் குரியராக் கிடுவோன்; 5

வேறு
 

செந்த மிழ்ப்பு லஞ்சி றந்த செய்ய சொற்க ளாற்பிர
பந்த மாலை கட்டி யெங்கள் பட்டி நாய கர்க்கணி


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 10:00:10(இந்திய நேரம்)