தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Periya Puranam

கந்த சாமி முதலி யார்செய் கணிப்பின் மாத வத்தினால்
மைந்த னாகி வந்து சைவம் வாழ வாழு மாண்பினோன்; 6
 
ஆண்டு தோறு மாறி ரண்ட தாயி லங்கு திருமுறை
பூண்ட நேச நியம மாக வோது கின்ற புண்ணியன்;
தாண்ட வஞ்செய் யீச னன்பர் தங்களுக் குகந்ததொண்
டீண்டு மன்பி னோடு செய்தி றைஞ்சு கின்ற வியல்பினோன்; 7
 
வேறு
 
தேவாரம் பண்ணினொடு சிறுவர்களும் பயின்றோதச் செய்து சைவர்க்
கோவாத நியதியெனுஞ் சிவதீக்கை முறைபுரிவித் தொழுகச் செய்வோன்;
மாவாழுங் கோவைநகர்த் தமிழ்ச்சங்கம் வளர்த்துவரும் வண்மை யாளன்;
பாவாணர் மகிழ்பிள்ளைக் கவிகருணை யம்பிகைதாள் பரவிச்
செய்தோன்; 8
வேறு
 
இன்ன வாகிய பண்புகள் பிறவுநன் கேய்ந்தோன்;
தன்ன வாகிய யாவையுஞ் சேக்கிழார் தமவா
முன்னி வாழுமெய் யறிவினோன் முயன்றுசெய் யுரையும்
மன்னி வாழியிவ் வண்ணலு மாநில மிசையே. 9


 

திருக்கோவலூராதீனம் ஸ்ரீமத் ஞானியார் மடாலயம
ஸ்ரீலஸ்ரீ சிவஷண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்
சந்நிதி வீதி, திருப்பாதிரிப்புலியூர், யுவ ஆண்டு கன்னிமதி 22

சிவபெருமானது அருட்டிறத்தினையும், அவ்வருட்டிறத்தினைப் பெற்று
இன்பமுற்ற அடியார் வரலாற்றினையும் அறிவிக்குந் தமிழ்ப்பேரிலக்கியம்
பெரிய புராணமாம் திருத்தொண்டர் புராணம்.

இந்நூற்குப் பல அறிஞர்கள் முன்னர் உரை கண்டனர்.

உரை காணும் வகை பலதிறத்தது. நம் அன்பர் திருவாளர் சி. கே.
சுப்பிரமணிய முதலியார்,
பி.ஏ. அவர்கள் கண்டிருக்கும் உரைவகை சாலச்
சிறந்ததொன்றே. இவ்வுரை பண்டையோர் கொள்கையை அரண் செய்து
இக்காலத்தினர் கொள்கைகளுள் ஏற்பன கொண்டு மிளிர்கின்றது.
சொன்னயங்களும் பொருணயங்களும் இலேசினறிய எடுத்துக்
காட்டப்பட்டிருக்கின்றன. நூலுள் நுழைந்து கிடந்த சாத்திரக் கருத்துக்கள்
வெளிப்படுத்தப்பட் டிருக்கின்றன.

கற்பார்க்கு வரும் ஐயங்களைத் தன்னுரை கொண்டும் பிற மேற்கோள்
கொண்டும் ஒழிக்கின்றது. திருமுறைகளினின்றும் வேறு பழைய
நூல்களினின்றும் காட்டப்படும் பகுதிகள் அசைக்க ஒண்ணா நிலையில்
அமர்ந்திருக்கின்றன. வேண்டும் இடங்களில் பொழிப்புரையும் பதவுரையும்
கருத்துரையும் குறிப்புரையுமாக விளங்குகின்ற திவ்வுரை.

இவ்வுரை கண்ட இவர்களும் இவர்கள் முன்னையோரும் தமிழ்ப்
புலமையிலும் சிறந்து, சிவபூசை செய்வதிலும் சிறந்து, அடியார் பத்தி
முதலியவற்றிலும் சிறந்து மேன்மை அடைந்தவர்கள்.

இவ்வுரை நூலுள் காணப்படும் படங்களோ இயற்கைக்கு மாறுபடா
அழகை உடையன. இவ்வுரை நூல் வடிவம் காண்பார் கண்ணைக் கவரும்
கவினைப் பெற்று ஒளிர்வது.

அச்சினிலை இறும்பூது பயக்கும் இயல்பினது.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 10:10:45(இந்திய நேரம்)