Primary tabs
படைத்தலைவ, ரமுதளிக்கும் பரஞ்சோதி யார்,
மெய்ச் செல்வமிகு சிறுத்தொண்டர், காழி நாடன்றிருவருள்சேர்ந் தவர், வளருஞ் சீராளன் றன்னை
நல்குதிரு வெண்காட்டு நங்கைசமைத் திடப்பின்னன்மதிச்சந் தனத்தாதி தலைக்கறியிட் டுதவப்
புல்கவரும் வயிரவர்தா மகிழ்ந்துமக வருளப்போற்றியவர் சிவனருளே பொருந்தி னாரே.
கழறியவை யறிந்தகோச், சிலம்போசைக் கருத்தார்,
நாவலர்கோ னண்ப, ரடித் சேர னென்றேநவின்றுவரும் வண்ணானை நயந்த கோ,நற்
பாவலர்கோப், பாணபத் திரனால் வாய்ந்தபரமர்திரு முகம்வாங்கிப் பணிகோ, வெற்பின்
மேவியகோ, வானைக்குக் குதிரை வைத்தவீரர்கோ, வெனையாளுஞ் சேரர் கோவே.
கணநாதர் திருத்தோணிக் கடவு ளார்க்கு
நந்தவனம் பலவமைத்து, மலருங் கொய்து,நற்றாமஞ் சொற்றாம நயந்து சாத்தி,
வந்தவரைத் தொண்டாக்கிப், பணிகள் பூட்டி,1வாதுசெய்த வாரணத்தை மகிழ்ந்து வாழ்த்திப்,
புந்திமகிழ்ந், தரனருளாற் கயிலை மேவிப்பொருவில்கணத் தவர்காவல் பொருந்தி னாரே.
கூற்றுவ நாயனார்
குன்றாத புகழாளர், களந்தை வேந்தர், கூற்றுவனார், மாற்றலர்மண் கொண்டுசூடப் பொன்றாழு முடிவேண்டப், புலியூர் வாழும் பூசுரர்கள் கொடாதகலப், புனிதனீந்த மன்றாடுந் திருவடியே முடியாச்சூடி, மாநிலங்காத், திறைவனுறை மாடக் கோயிற் சென்றாசையுடன் வணங்கிப்பணிகள் செய்து, திருவருளாலமருலகஞ்சேர்ந்துளாரே
புலவோர்பொற் பார்கலைகள் பொருந்த வோதிச்,
செய்யுளிடை வளராசு மதுர நல்லசித்திரம்வித் தாரமெனத் தெரிக்குஞ் செம்மை
மெய்யுடைய தொடைகளெல்லா மன்று ளாடன்மேவியகோ னிருதாளில் விரவச் சாத்திக்
கையுடையஞ் சலியினரா, யருளான் மேலைக்கருதரிய வமருலகங் கைக்கொண் டாரே.
1 வாதுசெய்த வாரணம் - சமண்வாது வென்ற ஆளுடைய பிள்ளையார்.