Primary tabs
போதகம்போ லென்னுயிரும் போக்கு மென்றே,
யழலவிர்வாள் கொடுத்தபிரா, னதிக மான்றேலடர்ந்தபெரும் படையேவ லவர்கொண் டேய்ந்த
தழல்விழிகொ டலைகாண்பார், கண்ட தோர்புன்சடைத்தலையை முடித்தலையாற் றாழ்ந்து வாங்கிக்,
கழல்பரவி, யதுசிரத்தி னேந்தி, வாய்ந்தகனன்மூழ்கி, யிறைவனடி கைக்கொண் டாரே.
சக்கரப்பா டியர்குலமெய்த் தவமா யுள்ளார்,
படர்புகழார் கலியனார், நலியுங் கூற்றைப்பாய்ந்த வர்க்கு விளக்கெரிக்கும் பரிவான் மற்றோ
ருடலிலராய்ச், செக்குழல்வார்க், கதுவு நேரா,துயர்மனைவி யைக்கொள்வா ருளரு மின்றி,
மிடறுதிர மகனிறைய வரிய, நாதன்வியன்கைகொடு பிடிப்ப, வருண் மேவி னாரே.
வேளாளர், சத்தியார், விமலர் பாதத்
துரியவர்க ளடிபரவு மொருமை யார், நாவோவாமே யைந்தெழுத்து முரைக்கு நீரா,
ரிருளின்மிட றுடையபிரா னடியார் தம்மையிகழ்வார்நாத் தண்டாயத் திடுக்கி வாங்கி
யரியுமது திருத்தொழிலா வுடையார், மன்றுளரடியசே வடிநீழ லடைந்து ளாரே.