தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

தவரான மூர்த்தியா ரிறைவனுக்குச் சாத்துஞ்

சந்தனக்காப் பினைவிலக்கி யமண்சமயச் சார்வாய்ப்

புவிபுரந்த கருநடமன் னவன்முதல னேகர்;

புராணகதை யினைப்பிரித்துப் புகலவெளி தலவே.

48
ஆரூரர் திருத்தொண்டத் தொகையுரைத்த நாளி

லடித்தொண்டு செய்தொண்டர் சில; ரவர்க்கு முன்னே

பேரூர்மெய்த் தொண்டுசெய்த பேர்சிலபே; ரவர்க்குப்

பிறகுதிருத் தொண்டுசெயும் பேர்சிலபே; ராகச்

சீரூருந் திருத்தொண்டர் புராணத்திற் சேர்த்துச்

சேவையர்கோன் சேவைசெயுந் தொண்டரள விறந்தோர்;

காரூரு மணிகண்டர்க் கவர்கள் செய்த

கைத்தொண்டி னிலைகரைகண் டுரைக்கவெளி தலவே.

49
ஒருலகோ? வொருதிசையோ? வொருபதியோ? தம்மி

லொருமரபோ? வொருபெயரோ? வொருகாலந் தானோ?

பேருலகி 1லொருமைநெறி தருங்கதையோ? பன்மைப்

பெருங்கதையோ? பேரொன்றோ? வல்லவே யிதனை

யே“ருலகெ லாமுணர்ந்தோ தற்கரிய வன்“னென்

றிறைவன்முத லடியெடுத்துக் கொடுத்தருளக் கொண்டு

பாருலகி னாமகணின் றெடுத்துக்கை நீட்டப்

பாடிமுடித் தனர்தொண்டர் சீர்பரவ வல்லார்.

50
கருங்கடலைக் கைநீத்துக் கொளவெளிது; முந்நீர்க்

கடற்கரையி னொய்மணலை யெண்ணியள விடலாம்;

பெருங்கடன்மேல் வருந்திரையை யொன்றிரண்டென் றெண்ணிப்

பிரித்தெழுதிக் கடையிலக்கம் பிரித்துவிட லாகுந்;

தருங்கடலின் மீனையள விடலாகும்; வானத்

தாரகையை யளவிடலாஞ்; சங்கரன்றா டமது

சிரங்கொடிருத் தொண்டர்புரா ணத்தையள விடநஞ்

சேக்கிழார்க் கெளிதலது தேவர்க்கு மரிதே!.

51
அறுபதுபேர் தனித்திருப்பேர்; திருக்கூட்ட மொன்ப;

தாகவறு பத்தொன்ப தரனடியார் கதையை

மருவிறிரு நாவலூர்ச் சிவமறையோர் குலத்து

வருசடைய னார்மனைவி யிசைஞானி வயிற்றி

லுறுதிபெற வவதரித்த வாரூரர் முன்னா

ளுரைசெய்த திருத்தொண்டத் தொகைப்பதிகத் தடைவே

நறைமலிபூம் பொழில்புடைசூழ் திருநாரை யூரி

னம்பியாண் டார்திருவந் தாதிகடைப் பிடித்து,

52
காண்டமீரண் டாவகுத்துக், கதைப்பரப்பைத் தொகுத்துக்,

கருதரிய சருக்கங்கள் பதின்மூன்றா நிலையிட்,

டீண்டுரைத்த புராணத்திற் றிருவிருத்த நாலா

யிரத்திருநூற் றைம்பத்து மூன்றாக வமைத்துச்,

1 ஓர் வமிச பாரம்பரியமாய்த் தொடர்ந்து வராமையின் ஒருமைநெறி தருங்கதையாகாது; மரபாற் பலவாய்வரினும் திருத்தொண்டின் ஒருதொடர்புபற்றியன ஆதலின் பன்மைப் பெருங்கதையாகாது.

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 17:25:27(இந்திய நேரம்)