தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Periya Puranam

சேண்டகைய “திருத்தொண்டர் புராண“மெனப் புராணத் திருமுறைக்குத் திருநாமஞ் சீர்மைபெற வமைத்திட், டாண்டகைமை பெறவெழுதி, மைக்காப்புச் சாத்தி, யழகுபெறக் கவளிகையு மமைத்ததில்வைத் ததன்பின்,
53
 
வேறு
சேவை காவலர் புராண காதைதொகை செயநி னைந்தெமை

யகன்றபின்

“இயாவர் தாமரு கிருந்த பேர்கள்? கதை சென்ற தெவ்வள?வி

ருந்ததெங்?

காவதென்? னிதைக ளறிய வேண்டும தறிந்து வாரு“மென

வளவர்கோ

னேவி னானுரிய தூதர்; தூதரறி யாம லொற்றரையு மேவினான்.
54
வென்றி வேள்வளவ னளவ றிந்துவர விட்ட காளையர்

புராணநூல்

ஒன்று பாதிகதை சென்ற தென்றுசில ரோடி னார், சில

ருவந்துசென்

றின்று நானைமுடி யும்பு ராணமினி யென்று ரைத்திட,

விறைஞ்சினான்;

சென்று நற்கதை முடிந்த தென்றுசிலர் செம்பி யற்குறுதி

செப்பினார்.

55
வந்து சொன்னவர்க ளனைவ ருக்குநவ மணிக ளுந்துகிலு

மம்பொனுஞ் சிந்தி யள்ளியு முவந்து வீசி, யுயர் செம்பொ னம்பல

மருங்கில்வா

ழந்தி வண்ணர்நட மும்ப ணிந்து, முத லடியெ டுத்தவர்

கொடுத்திடப்

புந்தி செய்துமகிழ் சேவை காவலர் புராண முந்தொழு

வனானெனா,

56
வீதி வீதிக டொறுந்தொ றும்பயண மென்று வென்றிமணி

முரசறைந்,

தோதி, வேதியர்க ளெண்ணி யிட்டவுயர் நாளு மோரையு

முகூர்த்தமும்

போத நாடி, வரை புரைக டக்களிறு புரவி தேர்கருவி யாடரச் சாது ரங்கமுட னேசெ லப்பிளிறு தந்தி மேல்கொடு நடந்தனன்.
57
தேர்மு ழக்கொலி, மழைக்க டக்கரட சிந்து ரக்களிறு பிளிறுசீ ரார்மு ழக்கொலி, பரிச்செ ருக்கொலி, பதாதி வந்தெதி

ரடர்ந்தெழும்

போர்மு ழக்கொலி, சழக்கி லாதுயர் படைக்க லண்புணரு

மோசை,

யேழ் கார்மு ழக்கொலியி னெட்டி ரட்டிநிறை கடன்மு ழக்கென முழக்கெழ.
58
வளவர் கோன்வர வறிந்து தில்லைமறை யோரும் வண்மைமட

பதிகளும்

பிளவு கொண்டமதி நுதன்ம டந்தையரு மற்று முள்ளபெரி

யோர்களுங்

களவி லாதமொழி கொடுபு ராணகதை செய்த கங்கைகுல

திலகருந்

தளவ மாலையப யனையெ திர்ந்தினிய சார வாசிபல சாற்றினார்.
59
முண்ட மானதிரு முடியு, மிட்டதிரு முண்டமுங், கவச

முந்துணைக்

1குண்ட லங்களு, மிரண்டு காதினும் வடிந்த லைந்தகுழையுந்,

திருக்

கண்ட மாலைகர மாலை யுஞ்சிரசு மாலை யுங்,கவின்

விளங்கவே

தொண்டர் சீர்பரவு வான ணைந்தசுப சரிதை சோழனெதிர்

கண்டனன்

60
கண்ட போதுள மகிழ்ந்து, தன்னையறி யாது, கைகடலை மீதுறக், “கொண்ட வேடமர னடியர் வேடமிது குறைவி லாததவ

வேட“மென்

றண்ட வாணர்திரு வருளை யுன்னி,யவ ரடிமை கொண்டபெரு

மையைநினைந்,

தெண்ட யங்கரச ரேறு சேவையர் குலாதி பாதுகை யிறைஞ்சினான்.
61
இறைஞ்சி யம்பலவர் பாத தாமரை யிறைஞ்ச வெண்ணி,வன்

முறைமையா

லறஞ்சி றந்தமுனி சேவை காவலரு, மாறைஞ், ஞூறுமறை

யோர்களுந்,

1 குண்டலம் - ஆறு உருத்திராக்கங்கள் சேர்த்தமைத்த காதணி. குழை - மணியிழைத்து வட்டமாய்ச் சதுரப்பாட்டுடன் அமைத்த காதணி. சரிதை - செயல்.

புதுப்பிக்கபட்ட நாள் : 23-09-2017 17:29:35(இந்திய நேரம்)