தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Periya Puranam

சிற்றிற் பருவம்

9.
அலைக்கும் புனல்சூ ழம்பலத்தி லாடும் பெருமா

னருள்பெற்றா

லவன்செய் தொழிலோ ரைந்துண்டு, வமைந்த

தொழிலோ மேற்கோட?

னிலைக்குங் கடையென் றொழித்தனையோ! நினையா

நிற்கு மனுக்கிரக

நீயே யதுசெய் யாவிடினெந் நிரப்பு நீக்கு

பவரியாரே?

மலைக்கும் பிறவிப் பிணிமருந்தே! வாழ்த்து வார்சிந்

தாமணியே!

வயங்குஞ் சைவப் பெருவாழ்வே! மாறாக்

கருணை மாக்கடலே!

சிலைக்குந் தமிழ்த்தண் டகநாடா! சிறியேஞ் சிற்றில்

சிதையேலே

செல்வஞ் செருக்கு குன்றையருட் செல்வா!

சிற்றில் சிதையேலே.


10
சிறுபறைப் பருவம்
10.
கனிவி லெமைப்பொரு வார்களு நெஞ்சு கரைந்து

கரைந்துருகக்,

காமரு பத்தியும் வயிராக்கியமுங் கவினக்

குதிகொள்ளத்,

தனிவில்பொன் மேருவெ னக்கொடு திரிபுர தகனம்

புரிபெருமான்

றயங்குபொ னம்பல நின்றுபல் லோரஞ் சலிசெய

நடநவில

நனிவி லிடும்புகழ் மிகுசம் பந்தரு நாவுக்

கிறையவரு

நாவலர் கோவுஞ் சிரகர கம்பித நன்கு

புரிந்தருள

முனிவி றமிழ்க்கவி பாடிய புலவன்! முழக்குக

சிறுபறையே

முழுமணி மாடக் குன்றத் தூரன்! முழக்குக

சிறுபறையே.

8
சிறுதேர்ப் பருவம்
11.
மருவாய் நறுந்தா தகித் தொங்கல் வளவர்கோ மகனுட

னிவாந்திரு கையு

மணிக்கவரி வாங்கிவீ சக்கற்ப கப்பூ மகிழ்ந்துவா

னாடர் தூற்றப்
பெருவாய் திறந்துபட கம்பேரி முதலாம் பெரும்பணை

யெலாமுழங்கப்

பிறங்குமூவா யிரவர் முதலியோர் மறையொலி

பிறங்கத் தொடர்ந்து போதக்

கருவா யுறாற்றை யாருந் தலைக்குமேற் கைகுவித்

தேத்தி மேவக்

கருதும் புராணமுடி விற்குஞ் சரத்தில கடத்திவர்ந்

தோங்கு தில்லைத்

தெருவா யுலாப்போது சேவையர் குலாதிபன்! சிறுதே

ருருட்டி யருளே

சிறுகோ லெடுத்தரசு செங்கோனிறுத்தினோன்!

சிறுதேருருட்டியருளே.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 15:20:44(இந்திய நேரம்)