Primary tabs
திருநீலகண்ட
நாயனார் - திருநீலகண்டக் குயவனார்
(359) -
அறுபான் மும்மைத் தனியடியாருளொருவர். "மாது சொன்ன சூளால் இளமை
துறக்க வல்லே னல்லன்" என்று முற்றத்துறந்த பட்டினத்தடிகளாற்
பாராட்டப்பெற்றவர். சரிதச் சுருக்கம் காண்க. (பக் - 492).
திருவெல்லை
- எல்லை (238 - 256) தில்லைக்கோயிலுக்கு
நாற்புறமும் ஒரு காத தூரத்தில் அமைந்தது. ஆசாரியர்கள் ஒவ்வொருவரும்
இத்திருவெல்லையைப் பணிந்து போற்றியே உட்சென்றனர்.
தில்லைவாழந்தணர்
(345) - தெய்வவேதியர் (357) -
தில்லையந்தணர்
(359) - மும்மையாயிரவர்
(3z57) -
(தில்லைவாழந்தணர்கள்) சபை - (389 -
390) - சிதம்பரத்தில் ஸ்ரீ நடராச
மூர்த்திக்கு அகம்படித் தொண்டு புரிவோர்.தீட்சிதர் என்று அழைக்கப்
பெறுவர். நட்டப்பிரான் ஆராதனையில் விருப்புற்றுத் திருக்கயிலையிலிருந்து
எழுந்தருளிய சிவகணத்தவர். இவர்கள் தொகை மூவாயிரம் என்ப.
"முட்டாத முச்சந்தி மூவாயிரவர்" முதலிய திருவாக்குகள் காண்க.
நட்டப்பிரானும் "நாமிவரிலொருவன்" எனத் திருவாய் மலர்ந்தருளினர்.
விதிமுறை அக்கினி காரியம் வழுவின்றிச் செய்வோர். தேவராத் தமிழ்
முறைகளிற் றுதிக்கப்பெற்றோர். திருஞானசம்பந்த சுவாமிகள்
கணநாதர்களாகக் கண்டுபதிகமோதியுள்ளார். இவர்கள் ஒன்பது தொகையடி
யார்களுள் ஒரு கூட்டத்தவர். சுருக்கம் காண்க. (ப. 444)
தில்லை
(2 - 350- 445) - பெரும்பற்றப்புலியூர்
(41) புலியூர் (227)
- சிதம்பரம் பார்க்க.
தினைநகர்
(237) - இது நடுநாட்டுத் தலங்களுளொன்று. தீர்த்தனகரி
என்றழைக்கப்பெறுவது. தலவிசேடங் காண்க (பக் - 276).
துந்துபி
(14) - தேவவாத்திய வகைகளிலொன்று.
துதிக்கையோன்
(18) - தாழ் செவி நீண்முடிக் கடக் களிறு
(3)
- விநாயகக் கடவுள். துதிக்கையினையுடைய யானைமுகமுடையவர்.
சிவபெருமானது மூத்த குமாரர். இவரது வரலாறு கந்தபுராணத்துட் காண்க.
துவரை
(24) - துவாரகை. கண்ணனது தலைநகரம். வடநாட்டிலுள்ளது.
துறையூர்
(225) - இது நடுநாட்டுத் தலங்களுளொன்று.
சந்தானகுரவருள் ஒருவராகிய சகலாகம பண்டிதரென்னும் அருணந்தி
சிவாசாரியார் அவதரித்ததலம். நம்பியாரூரர் தவநெறி வேண்டிப் பெற்ற
தலம். தலவிசேடங் காண்க. (பக் - 261).
தென்திசை
- (35) தென்புவி (37) - பரதகண்டத்தின்
தென்பாகம்.
சிவபெருமானது பூசனைக்குப் பொருந்தும் இடம் பலவும், புண்ணிய நீர்
பலவும் தன்னிடம் அமைய மாதவஞ் செய்து பெற்றது..
தேவர்
- சோதிவானவர் (87) - உம்பர் (265 -
299) - விண்ணவர்
(20) - அண்டர் (60) - திவ் என்ற ஒளிகொண்ட உடம்பையுடைய
வர்களாதலின் தேவர் எனப்படுவர்.
தேவாசிரியன்
(137 - 270 - 497) - தேவாசிரியனாங் காவணம்
(335) - இது ஒரு மண்டபம். இப்போது ஆயிரங்கால் மண்டபம் என்பர்.
திருவாரூர்ப் பூங்கோயிலுள் திருவாயின் முன்னால் உள்ளது. அடியார்
கூட்டம் நிறைந்துள்ள சபை. இங்கு நம்பியாரூரர் திருத்தொண்டத்தொகைப்
பதிகத்தைப் பாடியருளித் திருக்கூட்டத் தினடுவணைந்தனர். திருமால்
முதலிய தேவர்கள் தரிசனத்துக்குக் காலம் பார்த்தும் அடியார்களை
ஆசிரயத்துமிருக்குமிடம். திருக்கூட்டச் சிறப்புக் காண்க. (பக் - 183).
நந்தி (தேவர்)
(20 - 45) - சிவபெருமான் சன்னிதியில் அதிகாரியாக
இருத்தப்பெற்றவர். சிவனாரது முதற்சீடர். சிவாகமம் முதலான எல்லாச்
சாத்திரமும் பயின்றவர் முக்கண், நாற்றோன், நீலகண்டம் முதலியவற்றுடன்
பெருமானது சாரூபம் பெற்றவராய்க் கைகளிலே உடைவாளும் பிரம்புந்
தாங்கியவர். துவிதீயசம்பு. அபரபரமேசுவரன் என்று அழைக்கப்பெறுவர்.
இவர் சிலாத முனிவருக்குப்