Primary tabs
1370.
பொடியார்க்குந் திருமேனிப் புனிதர்க்குப் புவனங்கண்
முடிவாக்குந் துயர்நீங்க முன்னைவிட மமுதானாற்
படியார்க்கு மறிவரிதாம் பசுபதியார் தம்முடைய
வடியார்க்கு நஞ்சமுத மாவதுதா னற்புதமோ?
105
- தேவாரம்
திரு நனிபள்ளி - திருநேரிசை
துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்தி ராதே
அஞ்செழுத் தோதில் நாளு மரனடிக் கன்ப தாகும்
வஞ்சனைப் பாற்சோ றாக்கி வழக்கிலா வமணர் தந்த
நஞ்சழ தாக்கு வித்தார் நனிபள்ளி யடிக ளாரே.
5
(3) மதயானையை ஏவப்பெற்றது
- புராணம்
1380.
அண்ண லருந்தவ வேந்த ரானைதம் மேல்வரக் கண்டு
விண்ணவர் தம்பெரு மானை விடையுகந் தேறும் பிரானைச்
"சுண்ணவெண் சந்தனச் சாந்து" தொடுத்த திருப்பதி கத்தை
மண்ணுல குய்ய வெடுத்து மகிழ்வுட னேபாடு கின்றார்.
115
1381.
வஞ்சகர் விட்ட சினப்போர் மதவெங் களிற்றினை நோக்கிச்
செஞ்சடை நீண்முடிக் கூத்தர் தேவர்க்குந் தேவர் பிரானார்
வெஞ்சுடர் மூவிலைச் சூல வீரட்டர் தம்மடி யோநா
"மஞ்சுவ தில்லை" யென் றென்றே யருந்தமிழ் பாடி யறைந்தார்.
116
1382.
தண்டமிழ் மாலைகள் பாடித் தம்பெரு மான்சர ணாகக்
கொண்ட கருத்தி லிருந்து குலாவிய வன்புறு கொள்கைத்
தொண்டரை முன்வல மாகச் சூழ்ந்தெதிர் தாழ்ந்து நிலத்தி
லெண்டிசை யோர்களுங் காண விறைஞ்சி யெழுந்தது வேழம்.
117
- தேவாரம்
திருக்கெடில வீரட்டானம். பண் - காந்தாரம்
சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்திங்கட் சூளா மணியும்
வண்ண வுரிவை யுடையும் வளரும் பவள நிறமு
மண்ண லரண் முர ணேறு மகலம் வளாய வரவுந்
திண்ணென் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நா
மஞ்சுவ தியாதொன்று மில்லை யஞ்ச வருவது மில்லை.
(4) கல்லிற் பூட்டிக் கடலில் இடப்பெற்றது
- புராணம்
1388.
ஆங்கது கேட்ட வரச னவ்வினை மாக்களை நோக்கித்
தீங்கு புரிந்தவன் றன்னைச் சேம முறக்கொடு போகிப்
பாங்கொரு கல்லி லணைத்துப் பாசம் பிணித்தோர் படகில்
வீங்கொலி வேலையி லேற்றி வீழ்த்துமி னென்று விடுத்தான்.
123
1389.
அவ்வினை செய்திடப் போகு மவருடன் போயரு கந்த
வெவ்வினை யாளருஞ் சென்று மேவிட நாவுக் கரசர்