Primary tabs
செவ்விய தந்திரு வுள்ளஞ் சிறப்ப வவருடன் சென்றார்
பவ்வத்தின் மன்னன் சொன்ன படிமுடித் தாரப் பதகர8்.
124
1390.
அப்பரி சவ்வினை முற்றி யவரகன் றேகிய பின்ன
ரொப்பரு மாழ்கடல் புக்க வுறைப்புடைமொய்த்தொண்டர்தாமு
மெப்பரி சாயினு மாக வேத்துவ ளெந்தையை யென்று
செப்பிய வண்டமிழ்த் தன்னாற் சிவனஞ் செழுத்துந் துதிப்பார்;
125
1391.
"சொற்றுணை வேதிய" னென்னுந் தூமொழி
நற்றமிழ் மாலையா "நமச்சி வாய்" வென்
றற்றமுன் கர்க்குமஞ் செழுத்தை யன்பொடு
பற்றிய உணரர்வினாற் பதிகம் பாடினார்.
126
1392.
பெருகிய அன்பினர் பிடித்த பெற்றியால்
அருமல ரோன்முத லமரர் வாழ்ந்துதற்
கரியவஞ் செழுத்தையு மரசு போற்றிடக்
கருநெடுங் கடலினுட் கன்மி தந்ததே.
127
1393.
அப்பெருங் கல்லு மங்கரசு மேல்கொளத்
தெப்பமாய் மிதத்தலிற் செறிந்த பாசமுந்
தப்பிய ததன்மிசை யிருந்த தாவில்சர்
மெய்ப்பெருந் தொண்டனார் விளங்கித் தோன்றினார்.
128
1394.
இருவினைப் பாசமு மலக்க லார்த்தலின்
வருபவக் கடலில்வீழ் மாக்க ளேறிட
வருளுமெய் யஞ்செழுத் தரசை யிக்கட
லொருகன்மே லெற்றிட லுரைக்க வேண்டுமோ.
129
- தேவாரம்
நமசிவாயத் திருப்பதிகம் - பண் காந்தார பஞ்சமம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்,
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினு,
நற்றுணை யாவது நமசி வாவே.
1
திருநீலக்குடி - திருக்குறுந்தொகை
கல்லி னோடெனைப் பூட்டி யமண்கையர்,
ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடியான்,
நல்ல நாமம் நவிற்றியுந் தேனன்றே.
7
5. சூலமு மிடபமும் தோள்களிற் பொறிக்கப் பெற்றது
- புராணம்
1415.
புன்னெறியா மமண்சமயத் தொடக்குண்டு போந்தவுட
றன்னுடனே யுயிர்வாழத் தரியேனான் றரிப்பதனுக்
கென்னுடைய நாயக! நின் னிலச்சினையிட் டருளென்று
பன்னுசெழுந் தமிழ்மாலை முன்னின்று பாடுவார்,
150
1416.
"பொன்னார்ந்த திருவடிக்கென் விண்ணப்ப" மென்றெடுத்து
முன்னாகி யெப்பொருட்கு முடிவாகி நின்றானைத்
தன்னாகத் துமைபாகங் கொண்டானைச் சங்கரனை
நன்னாமத் திருவிருத்த நலஞ்சிறக்கப் பாடுதலும்,
151