Primary tabs
ஐந்தாவது
திருநின்ற சருக்கம்
திருச்சிற்றம்பலம்
"திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்ற னடியார்க்கு மடியேன்;
பெருநம்பி குலச்சிறைத னடியார்க்கு மடியேன்;
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கு மடியேன்;
ஒருநம்பி யப்பூதி யடியார்க்கு மடியேன்;
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன்;
அருநம்பி நமிநந்தி யடியார்க்கு மடியேன்;
ஆரூர னாரூரி லம்மானுக் காளே"
- திருத்தொண்டத்தொகை (4)
திருச்சிற்றம்பலம்