Primary tabs
மிளிர்கிறது. அடுத்து
அதிகாரிகளின் இசைவு மடல் வருகின்றது. மறைத்திரு A.
அருள்நாதர் என்ற குரு நூலை நன்கு படித்து, இருந்த குறையைத்
திருத்தச் செய்தபின், அது கிறிஸ்தவ மக்களுக்கு நன்மை பயக்கும் நூல்
என்று உறுதி கூறுகின்றார். இவை அனைத்தும் தேம்பாவணிக்
கீர்த்தனைக்கு அன்றிருந்த செல்வாக்கை எடுத்துரைக்கின்றன.
சென்னையில்
தமிழ் ஆசிரியராய் விளங்கிய வித்துவான் A. S.
ஜெகராவு முதலியார் 1901 ஆம் ஆண்டில் தேம்பாவணியின் முதற்
காண்டத்திற்கு விருத்தியுரை எழுதி அச்சிட்டார். திருச்சி, வளனார்
கல்லூரியில் தமிழாசிரியராய்ப் பணிபுரிந்த திரு. மு. ஆரோக்கியசாமி
என்பவர் 1912-இல் 'தேம்பாவணிக் கருப்பொருள் அல்லது அர்ச்.
சூசையப்பர் மான்மியம்' எனும் அரிய சிறிய நூலை வழங்கினார்.
1960இல்
மறைத்திரு ரா. ஞானப்பிரகாசம். சே. ச., அவர்களும்,
திரு. ரா. லே. ஆரோக்கியம் பிள்ளை அவர்களும், தேம்பாவணி
நாட்டுப் படலத்துக்கும் நகரப் படலத்துக்கும் எழுதிய விளக்க உரையை,
மதுரை தெ நோபிலி அச்சகத்தார் வெளியிட்டனர்.
முன்னால்
தூத்துக்குடியிலும் இப்பொழுது திருச்சியிலும் பணிபுரியும்
தமிழ் இலக்கியக் கழகம், 1961-இல் தேம்பாவணி முதற் காண்டத்தையும்,
1964 மே மாதம் இரண்டாம் காண்டத்தையும், 1964 டிசம்பர் மாதம்
மூன்றாம் காண்டத்தையும் வெளியிட்டது. அதில் திரு. ரா. லே.
ஆரோக்கியம் பிள்ளை செய்யுட்களைச் சந்தி பிரித்து எழுதியுள்ளார்;
நிறுத்தக் குறிகளும், கடின சொற்களுக்குப் பொருளும், செய்யுட்களின்
கருத்திற்கேற்ற சிறு தலைப்புகளும் தந்துள்ளார்.
1970-இல்
வீரமாமுனிவர் ஆய்வுக்கழகம் 'தேம்பாவணி மலர்கள்'
என்ற நூலை வெளியிட்டது. இது, முதற் காண்டத்திலிருந்து எடுத்த சில
பாடல்களையும், கடின சொல் விளக்கத்தையும் கொண்ட சிறு நூல்.
முனிவரின்
மூன்றாம் நூற்றாண்டான 1980இல் அவர் பிறந்த நாளான
நவம்பர் எட்டாம் நாளில், புதுவை புலவர்மணி ஜோசப் ராயர், புதுவை
மாநிலத் தமிழ் எழுத்தாளர் பேரவை வெளியீடாக, தேம்பாவணி வசனம்