தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Library


எழுதினார். அது தேம்பாவணியின் பெரும்பாலான செய்யுட்களின்
கருத்தைச் சுருக்கமாக உரைநடையில் உரைத்து, இடையிடையே
மேற்கோளாக சில செய்யுட்களையும் கொடுக்கும் நூல்.

இவ்வுரை:

முனிவரின் 3ஆம் நூற்றாண்டு விழா நாகர்கோவிலில் கொண்டாடப்
பட்டபோது, தேம்பாவணி முழுவதற்கும் விளக்க உரை இல்லாத குறையை
நீக்கவேண்டுமென, பொதுமக்கள் கோட்டாறு ஆயர் மேதகு. ம.
ஆரோக்கியசாமி ஆண்டகையிடம் விண்ணப்பம் செய்தனர். அவரும்
உடனே, 'Missio' என்ற வெளிநாட்டு நிறுவனத்திற்கு எழுதிப்
பொருளுதவி பெற்றுத் தந்தார்.

வீரமாமுனிவர் ஆய்வுக்கழகம் கேட்டுக்கொண்டபடி, இறைப் பற்றும்
தமிழ் அறிவும் நிரம்பக்கொண்ட பேராசிரியர் மரிய அந்தோணி இப்புதிய
விளக்க உரையை ஆக்கித் தந்தார். பெரும் புலவர் ஆபிரகாம்
அருளப்பார், டாக்டர் சூ. இன்னாசி, மறைத்திரு. வி. மி. ஞானப்பிரகாசம்
சே. ச., ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டகுழு இவ்வுரையைக்
கூர்ந்து நோக்கித் திருத்தம் செய்தது.

இவ்வுரை, செய்யுளை முதலில் சந்தி பிரிக்காமலும் அடுத்துச் சந்தி
பிரித்தும் தருகின்றது; அதன்பின் பொழிப்புரையும், இலக்கணக்
குறிப்புகளும், பிற இலக்கிய மேற்கோள்களும் கொடுக்கின்றது. இதனால்,
யாப்பிலக்கணம் கற்றவரும் மற்றவரும் இதனை எளிதில் பயன்படுத்தலாம்.

மரக்காலின்கீழ் மறைந்திருக்கும் தேம்பாவணி விளக்கு, விளக்குத்
தண்டின்மேல் வீற்றிருக்க, இது வீரமாமுனிவர் ஆய்வுக் கழகம் எடுக்கும்
சிறு முயற்சியாகும்.

செய்ந்நன்றி அறிதல்:

இவ்வுரையை வெளியிட இறையருளைப் பெற்றுத்தந்தவர் பலர்.
அன்பு ஆர்வம் ஆற்றல் மிக்க, கோட்டாறு ஆயர் மேதகு, ம.
ஆரோக்கியசாமி எல்லா வகையிலும் இனிய முறையில் உதவினார்.
பேராசிரியர் மரிய அந்தோணி, உடல் நோய், குடும்பப் பொறுப்பு போன்ற
பல இடையூறுகள் ஏற்படினும் அவற்றை நகையோடு அடுத்தூர்ந்து
அயராது உழைத்து இவ்வரிய உரையை முடித்தார்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:11:48(இந்திய நேரம்)