தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Library


பெரும்புலவர் ஆபிரகாம் அருளப்பரும், டாக்டர் சூ. இன்னாசியும்,
அழைத்த போதெல்லாம் அகமகிழ்ச்சியோடு வந்து உரையை
வரிவரியாகக் கூர்ந்து நோக்கிச் செப்பனிட்டனர்.

மறைத்திரு, லூர்து ஜான் சே. ச., பயனுள்ள சிந்தனைகளை வழங்கி
ஊக்குவித்தார். ஓவியர் திருவாளர் V. சண்முகம் நூலின் உரையை அழகு
செய்தார். பாத்திமா அச்சகத்தின் முன்னாள் மேலாளர் சகோ.
அந்தோணி T. இரமாயில் தி. இ. ச., இன்றைய மேலாளர் சகோ.
S. லூர்துராஜ், தி. இ. ச., மிகுந்த பொறுமையோடு இந்நூலை அச்சிட்டு
உதவினர். இவர்களும் இன்னும் பலரும் செய்த உதவிகளை
வீரமாமுனிவர் ஆய்வுக்கழகம் நன்றி உணர்வோடு நினைக்கின்றது.

இவ்வுதவிகள், செய்யாமற் செய்த உதவிகள், பயன்தூக்கார் செய்த
உதவிகள், கைம்மாறு வேண்டாக் கடப்பாடு உடையோர் செய்த
உதவிகள்; வையகம் இவற்றிற்கு ஆற்றாவிடினும் வானகம் இவர்கள்மீது
அருள் பொழியுமாறு, தேம்பாவணித் தலைவன் வளன் வழியாக
இறைவனை வேண்டுகிறோம்.

                              வி. மி. ஞானப்பிரகாசம், சே. ச.,
                              வீரமாமுனிவர் ஆய்வுக் கழகம்,
                                 தூய சவேரியார் கல்லூரி,
                                 பாளையங்கோட்டை.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 21:11:58(இந்திய நேரம்)