Primary tabs
'தோல்' என்பதன்
வடிவங்கள், தோற்றல், தோற்றான், தோற்று, தோற்ற
என அமைய வேண்டியன, தோர்வை, தோர்த்தான், தோர்த்து, தோர்த்த
என அமையும் (3 : 14; 12 : 68). 'சொல்' என்ற வினையடியினின்று,
சொற்றல் - சொல்லுதல், சொற்றான் - சொல்லினான், சொற்று - சொல்லி,
சொற்ற - சொன்ன என்று வர வேண்டியன, சொற்றுதல், சொற்றினான்,
சொற்றி, சொற்றிய என வரும் (5 : 64; 6 : 7; 8 : 25). 'செல்' என்பது,
செல்லுதல் - சேறல், சென்றான், சென்று, சென்ற என வரத்தக்கன,
சேறுதல், சேறினான், சேறி, சேறிய என்பனவாய் வரும் (8 : 39). 'புகு'
என்பது, புகுதல் - புகல், புகுந்தான் - புக்கான், புகுந்து - புக்கு,
புகுந்த - புக்க என்று நிற்க வேண்டியன, புக்கல், புக்கினான், புக்கி,
புக்கிய என்ற வடிவங்களுக்கு இடந்தந்து நிற்கும் (10 : 99). இவைபோல்
இன்னும் பல.
2.
''பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற்
செல்லா தாகும் செய்யும்
என் முற்றே''
என்பது இலக்கண விதி (நன். 348). முனிவர், 'கோதையார் குழலிற்
பூச்சிறைப் படுத்தும்,' எனப் பலர்பாலுக்கும் (1 : 28), "தமியேன் உருகும்"
என முன்னிலைக்கும் (5 : 63) அதனை உரிமையாக்குவார்.
3. செல்லுதல் - வருதல், எம் - நம், காய் -
கனி என்பவற்றை
வேறுபாடின்றி வழங்குவார் (5 : 1, 2)
4.
பெயரெச்சத்தினிடையே 'அன்' சாரியை சேர்த்து வழங்குதல்
முனிவர் புது மரபு: ''பேர்த்தன பருதி'' (2 : 20).
5.
பொருளுக்கு வேண்டாச் சொற்களை மிகையாக இட்டு
வைத்தல்: ''அன்னவை எவரும் கேட்ப அவை
வரைக'' (பாயிரம் 11);
''மூன்று அனைத்து உலகமெல்லாம்'' (9 : 119);
''எனைப் பகல் தோறும்''
(12 : 55)
6.
தரின் என்பது 'தந்தின்' (6 : 55) எனவும், காட்டின், ஒளிக்கின்,
மாந்தின் என்பன, காட்டினேல், ஒளிக்கினேல் (7 : 87), மாந்தினேல்
(9 : 107) எனவெல்லாம் அமையும் 'செயின்' வாய் பாட்டு வினையெச்ச
வடிவங்கள்.