Primary tabs
7. எஞ்ச -
எஞ்சுக, விஞ்ச - விஞ்சுக, அஞ்ச - அஞ்சுக என
வரும் 'செய' வாய்பாட்டு வினையெச்சங்கள்.
8.
லோத்து, ரோசை என்று மொழி முதலாக வராத
எழுத்துக்களுக்கு முன், மரபுப்படி உகரம் சேர்த்து, உலோத்து, உரோசை
என அமைக்காது, இலோத்து, இரோசை என வழங்கும் புது மரபு
(6 : 70; 8 : 5).
9.
''ஈங்கு தேடு சீரெலாம்'' என மென்றொடர்க் குற்றுகரச் சுட்டு
முன் வலி மிகாமை (7 : 37).
10.
ஏவற் பன்மைக்குரிய 'மின்' விகுதியை ஒருமைக்கும்
உரியதாக்குதல்: ''உற்றது சொன்மின் என்ன, ... ... செப்புதலுற்றான்
வானோன்'' (16 : 7).
சிலர் கருதுவதுபோல், சுப்பிரதீபக் கவிராயரோ,
வேறொரு
தமிழகத் தமிழ்ப் புலவரோ இத்தகைய சொல்லாட்சிக்கு
உட்படுவாரென்பது கனவிலும் கருதத் தக்கதன்று இவை
போன்றனவெல்லாம் குற்ற நோக்குடையார் நூலிற் குறைகாண
இடந்தரினும், எதிர்மறை விளைவாய், வீரமாமுனிவரே நூலாசிரியரென
ஆணித்தரமாய் அலசிக் காட்டுவனவாம். அவரே வேண்டுவதுபோல்,
''மடக்கிளி 'கிளற்றும்' புன்சொற் கொண்டு உமிழ்ந்து உரைப்ப்ப''தாக
பாயிரம் : 6 நிறைவு காண்போம்.
உரையாசிரியர்
: 'இக்காப்பியத்தைப் பிரசித்தப்படுத்தியவர்''
என்று தம்மை அறிமுகஞ் செய்து கொண்டு, 1851ம் ஆண்டு
தேம்பாவணியை முதன்முதற் புதுவையில் அச்சிட்டவர், ''வீரமாமுனிவர்
கையெழுத்துப் பிரதி (M. Walter Elliot) வல்ட்டர்
எலியாட் டென்னும்
மேன்மை பொருந்திய உபகார சற்குணமுடைய துரையவர்களிடத்து
இருந்ததையறிந்து நாம் கேட்டதின் பேரில், அவர் மிக்க தாஷிணையாய்த்
தயைசெய்து, அதனை அச்சிற் பதிக்க இரவலாக அனுப்பினார். அப்பிரதி
வீரமாமுனிவர் கையெழுத்தென்பதற்கு உண்டான பற்பல
அத்தாட்சிகளல்லாதே, அதின் எழுத்துவிதமும், அவர் கிறுக்கி வரிகீன்று
எழுதின பல கவிகளும், உரைகளும், மாற்றின ஓர் படலப் பெயரும்,
ஏட்டின் ஓரத்திற் சீமைப்பாஷை எழுத்தால் எழுதித் தந்த வேதாகம
உதாரணங்களும், இவை முதலிய பல திருட்டாந்தங்களும்
அதற்கு