தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Manonmaniam


  • மனோன்மணீயம்

    240

    IX

    நைடதம்

    பக்கம்
    வரி

    3
    64-8
    'வேழவெண் மருப்பும் வீசிக் காழகிற்
    சந்தனா டவியுஞ் சாடி வந்துயர்
    குங்கும முறித்துச் சங்கின மலறும்
    தடம்பணை தவழ்ந்து, மடமயில் நடம்பயில்
    வளம்பொழில் கடந்து குளம்பல நிரப்பி'
    “வேழ வெண்மருப் பெறிந்துவெண் ணித்திலம் வரன்றிக்
    காழ கிற்றுணி சந்தொடு கையரிக் கொண்டு
    கோழ ரைச்செழுங் குங்குமத் தடஞ்சினை சாடி
    ஆழ்தி ரைக்கடல் அகடுகீண் டொழுகிய தன்றே”
    “கங்கை யென்றுல கேத்திய கடவுள்மா நதிவெண்
    சங்கு சூலுளைந் தலறிய தடம்பணை தவழ்ந்து
    கொங்கு யிர்த்தபூந் தடத்துலாய்க் குளம்பல நிரப்பி
    அங்கண் மாநிலத் தமிழ்தெனப் பரந்ததை யன்றே”

    (நாட்டுப்படலம்- 4,5)

    38
    116-17
    'நிலவொளி முத்துங் கவடியும் பணமா
    அலவன் பலவிர லாலாய்ந் தெண்ண'
    “வரிவ ளைக்குலக் குவையினால் மணிகளால் மணிகள்
    தெரித ருங்கர வலவனால் வயின்வயிற் றிரண்ட
    விரிக ருப்புர வெண்மணற் குன்றினால் ஒலியால்
    பொருவில் ஆவணம் மறிதிரைக் கடலினைப் பொருவும்”

    (நகரப்படலம் -14)

    100
    65-68
    'நிணங்கமழ் கூன்பிறைத் துணைமருப் பசைத்து
    மம்மர் வண்டின மரற்ற மும்மதம்
    பொழியும் வாரணப் புயலினம் தத்தம்
    நிழலொடு கறுவி நிற்பதும் அழகே'
    “நிழலொடு கறுவி பாகெறிந் தூன்பெய்
    நிணத்தொடு பழகுகூன் பிறைக் கோட்
    டழிகவுட் கடாத்த தறுகண்மால் யானை”

    (சுயம்வரப் படலம் - 61)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:34:38(இந்திய நேரம்)