தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


பெரு நிலச்சுவான்களைத் தவிர, ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராக, எல்லா வர்க்கங்களும் ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்பட்டது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி தேசீய இயக்கம் வளர்ந்தது. ஆயினும் நமது அடிப்படையான சமுதாய அமைப்பு இன்னும் சுரண்டல் அடிப்படையிலே இருக்கிறது. கிராமப்புற மக்களது வாழ்க்கையில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருப்பினும் அவர்கள் தாங்கள் வாழ்க்கை நடத்துவதற்கு நிலச்சுவான்களுடைய நிலத்தில் உழைக்கும் நிலையில்தான் இருக்கிறார்கள். பஞ்சாயத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கிருந்தாலும், அவ்வுரிமையை, சுதந்திரமாக நிறைவேற்ற வழி இல்லாமல் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறுக்கே நிற்கின்றன.

ஆங்கிலேய ஆட்சியில் கொடுஞ் சுரண்டல் காரணமாக நிலத்தை இழந்த விவசாயிகள் புதுத்துறைகளில் நுழைந்து வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். அவர்கள் நகரங்களில் தொழிலாளராகவும் மலைத் தோட்டங்களில், தோட்டத் தொழிலாளராகவும் பணியாற்றுகிறார்கள். அங்கும் அவர்கள் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

நாடு விடுதலை பெற்ற பதினைந்து ஆண்டுகளில் அடிப்படைத் தொழில்கள் வளர்ச்சிப் பெற்றுள்ளன. நமது சுதந்திரம் பலமடைந்துள்ளது. உற்பத்தி பெருகி உள்ளது. ஆயினும், இவற்றின் பயன்களனைத்தும், உழைக்கும் மக்களுக்கு அதிகமாகக் கிடைக்கவில்லை. நாட்டில் தொழில் வளர்ச்சியுற, தமது வாழ்வும் வளம் பெற வேண்டும் என்று உழைப்பாளி மக்கள் விரும்புகிறார்கள்.

இந்த சமூகச் சரித்திரப் பின்னணியில் உழைப்பாளி மக்களது படைப்புக்களான நாட்டுப் பாடல்களையும், கதைகளையும், நாடகங்களையும், கூத்துக்ளையும் நாம் நோக்க வேண்டும்.

நமது மக்களிடையே வழங்கிவரும் கதைப்பாடல்கள் எண்ணற்றவை. அவற்றை நான்கு விதமாகப் பிரிக்கலாம், 1. இதிகாசத் துணுக்குகள், 2. கிராம தேவதைகளின் கதைகள், 3. சமூகக் கதைகள், 4. வரலாற்றுக் கதைகள்.

இதிகாசங்களான இராமாயணம், பாரதம் ஆகிய இரண்டில் பாரதக் கதையோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளைக் கருப்பொருளாகக் கொண்டு பல கதைப் பாடல்கள் இருக்கின்றன. இன்னும் கிராம மக்கள் இராமாயணத்தை விட பாரதத்தையே அதிகமாக விரும்பிக் கேட்கிறார்கள்.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 04:51:43(இந்திய நேரம்)