தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).


சேர்ந்த கிளி

நெடு நாட்கழித்து காதலர்கள் மகிழ்ச்சியோடு உரையாடுகிறார்கள்.

ஆண்:
 செட்டி கடை வெட்டி வேரு
சிவ காசிப் பன்னீரு
கட்டி மருக் கொழுந்தே
கம்மாயில கூடினமே

 

பெண்:
கூடினதில் குற்றமில்லை
குலத்துக் கொரு ஈனமில்லை
 ஊராரு சொல்லையிலே
 ஊடுருவிப் பாயுதையா

 

ஆண்:
நந்தட்டம் பாதை வழி
நான் போவேன் ஒத்தவழி
மின்னிட்டான் பூச்சி போல
 முன்னே வந்தா லாகாதோ

 

பெண்:
கல்லுரலு மேலி ருந்தது
கனிவாய நீ திறந்தா
செம்பங் கிளி வாய் திறந்தா
சேர்ந்த கிளி வந்திருமே 

 

சேகரித்தவர்:
S.S. போத்தையா

இடம்:
விளாத்தி க் குளம் பகுதி,
திருநெல்வேலி மாவட்டம்.




Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:11:05(இந்திய நேரம்)