தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


குறுக்குச் சிறுத்தவரே
கூத்தாடி மன்னவரே
நாக்குத் திருத்தத்துக்கு
நானுமில்ல ஆசை கொண்டேன்

வந்திருவார் இந்த வழி
வாச்சிருவார் தங்கக்கட்டி
தந்திருவார் வெற்றிலையும்
தயவு வார்த்தை சொல்லிடுவார்

பச்சைக்கல்லு மேமுருகு
பதினெட்டு வானப் பச்சை
மலங்காட்டு மாசிப் பச்சை
மணக்குதையா உங்க மேலே

ஆல மரத்துக் கிளி
ஆசாரம் பேசுங் கிளி
நான் வளர்த்த பச்சை கிளி
நாளை வரும் இந்த வழி

கம்பி போட்ட வேட்டிக்காரா
கம்பளத்துப் பிள்ளையாண்டா
கடைக் கண்ணுப் புருவத்திற்கு
கான மயில் ஆசை கொண்டேன்

பல்லு விலை பெறுமே
பணம் ஐந்து சொல் பெறுமே
சொல்லு விலை பெறுமே
சோலைக் கிளி வாய் திறந்தால்

பூசம் பொடியுண்டு
பொடியடைக்க கம்பியுண்டு
நாசிப் பொடியுண்டு
நான் இணங்குஞ் சாமியிட்ட

புதன் கிழமை தலை முழுகி
போக வரச் சிக் கெடுத்து
கண்ணு ரெண்டும் சோரவிட்டு
கடைக்கி மின்ன நிக்காக



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 05:13:34(இந்திய நேரம்)