தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1223


ஐந்தாவது இயல்

பெயரியல் 

152. எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே.

என்பது சூத்திரம். 

இவ்வோத்து   என்ன     பெயர்த்தோவெனின்,     பெயர்ச்சொல்
உணர்த்துகின்றா ராகலின், இது பெயரியல் என்னும் பெயர்த்தாயிற்று. 

உரை:   எல்லாச் சொல்லும் - பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும்
இடைச்சொல்லும்  உரிச்சொல்லும் ஆகிய எல்லாச் சொல்லும், பொருள்
குறித்தனவே - பொருள் குறியாது நில்லா என்றவாறு. (1) 

153. பொருண்மை தெரிலுஞ் சொன்மை தெரிதலுஞ்

சொல்லி னாகு மென்மனார் புலவர். 

உரை:    தன்னின் வேறாகிய பொருள் தெரியப்படுதலும், பொருள்
அறியப்படாத  சொல்  தன்னையறியப்படுதலும்  இரண்டு  சொல்லான்
ஆம் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. 

வரலாறு: சாத்தான் வந்தான்; பண்டு காடுமன்; உறுகால் [நற்றிணை
- 300] என்பனவற்றாற் பொருள் உணர்த்தப்பட்டவாறு. 

‘நீயென் கிளவி’ [தொல். சொல். பெயரியல் - 35]

‘செய்தெ னெச்சம்’ [தொல். சொல். வினையியல் - 42]

‘தஞ்சக் கிளவி’ [தொல். சொல். இடையியல் - 18]

‘கடியென் கிளவி’ [தொல். சொல். உரியியல் - 85]

என்பவனவற்றால் பொருள்    உணரப்படாது,   அச்   சொற்றாமே
உணரப்பட்டவாறு கண்டு கொள்க. (2) 

154. தெரிபுவேறு நிலையலுங் குறிப்பிற் றோன்றலு
மிருபாற் றென்ப பொருண்மை நிலையே. 

உரை: மேற் கூறப்பட்ட பொருண்மை தெரிதல், சொன்மாத்திரத்தால்
விளங்கிநிற்றலும்,  சொன்மாத்திரத்தாற்  றோன்றாது  சொல்லொடுகூறிக்
குறிப்பாற் றோன்றலும் என இரண்டு கூற்றையுடையது என்றவாறு. 

வரலாறு:  அவன், இவன், உவன் -- வந்தான், சென்றான் என்புழிப்,
பொருள்தெரிபு வேறுநின்றன. 

‘ஒருவர் வந்தார்’  என்புழி,  ஆண்பால்  பெண்பால்  என்பதூஉம்,
உண்ணாநின்றான் கற்கறித்து, ‘நன்கட்டாய்’ என்புழித்,
  

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:24:36(இந்திய நேரம்)