Primary tabs

வருந்திய கலை என்பதாம்.
‘தாவி னன்பொன்’
என்றக்கால், வலியி னன்பொன் என்பதாம்; பொன்னுக்குப்
போக்குடைமை வலியது. (48)
340. தெவ்வுப் பகையாகும்.
வரலாறு :
‘தெவ்வர் தேயத்து’
என்றக்கால், பகைவர் தேயத்து என்பதாம். (49)
341. விறப்பு முறப்பும் வெறுப்புஞ் செறிவே.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இவை யெல்லாங் குறிப்பு.
வரலாறு:
‘விறந்த காப்பொடு’
என்றக்கால், செறிந்த காப்பொடு என்பதாம்.
‘உறந்த விஞ்சி யுயர்நிலை மாடம்’
என்புழி, செறிந்த இஞ்சி என்பதாம்.
‘வெறுத்தார்’ (புறம்-53)
என்றக்கால், செறிந்தார் என்பதாம். (50)
342.
அவற்றுள்
விறப்பே வெரூஉப் பொருட்டு மாகும்.
வரலாறு :
‘கோடுமுற்றி யளந்த காரொடு விறந்தே’
என்றக்கால், வெரீஇ என்பதாம். (51)
343.
கம்பலை சும்மை கலியே யழுங்க
லென்றிவை நான்கு மரவப் பொருள.
இவை இசைபற்றி வந்தன.
வரலாறு :
‘ஊர் கம்பலை யுடைத்து’
என்றக்கால், அரவமுடைத்து என்பதாம்;
‘ஊர் சும்மை யுடைத்து’
என்பதும் அது;
‘கலிகெழு மூதூர்’ (அகம் - 11)
‘அழுங்கன் மூதூர்’
என்பனவும் ஒக்கும். (52)
344.
அவற்றுள்
அழுங்க லிரக்கமுங் கேடு மாகும்.
வரலாறு :
‘மகனையிழந் தழுங்கினார்’
என்றக்கால், இரங்கினார் என்பதாம்.
‘செலவழுங்கினார்’
என்றக்கால், செலவு கெடுத்தார் என்பதாம்.
இவை குறிப்புப்பற்றி வந்தன. (53)
345.
கழுமென் கிளவி மயக்கஞ் செய்யும்.
வரலாறு :
‘கழுமியஞாட்பு’ (களவழி - 11)
என்றக்கால், மயங்கிய ஞாட்பு என்பதாம். (54)
346. செழுமை வளனுங் கொழுப்பு மாகும்.
வரலாறு:
‘செழுஞ் செந்நெல்’
என்றக்கா