தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-IlambunarUrai

இளம்பூரணர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   1286


ல், வளஞ் செந்நெல் என்பதாம். வளம் என்பது ஆக்கம்.

‘செழுந்தடி தின்ற செந்நா யேற்றை’

என்பது,   கொழுந்   தடி   தின்ற   என்பதாம்;  கொழுப்பு  என்பது
ஊன்பற்றிய நிணம். (55)

347. விழுமஞ் சீர்மையு மிடும்பையுஞ் செய்யும்.

வரலாறு :

‘விழுமியர்’

என்றக்கால், சீரியர் என்பதாம்.

‘விழுமமுற் றிருந்தார்’

என்றக்கால், இடும்பையுற் றிருந்தார் என்பதாம். (56)

348. கருவி தொகுதி.

வரலாறு:

‘கருவி வானம் கதழுறை சிதறி’ (அகம் - 4)

என்றக்கால்,    ஈண்டு,    மின்னும்    முழக்கும்    காற்றும்    என
இத்தொடக்கத்தன வாயிற்று. (57)

349. கமநிறைந் தியலும்.

வரலாறு: 

‘கமஞ்சூன் மாமழை’ (திருமுருகு-7)

என்றக்கால், நிறைந்த சூன் மாமழை என்பதாம். (58)

350. அரியே யைம்மை.

வரலாறு :

‘அரிமயிர்த் திரண்முன்கை’

என்றக்கால், ஐம்மயிர்த் திரண் முன்கை என்றவாறாம். ()

351. கவவகத் திடுமே.

இவை யெல்லாங் குறிப்பு.

வரலாறு : 

‘கொடும்பூண் கவைஇய கோல மார்பு’

என்றக்கால், கொடும் பூண் அகத்திட்ட கோல மார்பு என்பதாம். (60)

352. துவைத்தலுஞ் சிலைத்தலு மியம்பலு மிரங்கலு
மிசைப் பொருட் கிளவி யென்மனார் புலவர்.

இச்சூத்திரம்  என்னுதலிற்றோ  வெனின்,  இவை  நான்கும் இசைபற்றி
வந்தன.

வரலாறு :

‘வரிவளை துவைப்ப’ (புறம்-158)

என்றக்கால், சங்கு இசைப்ப என்பதாம்.

‘கலையினிரலை சிலைப்ப’

என்றக்கால் அதனது குரலிசைப்பைச் சொல்லிற்றாம்;

‘ஏறு சிலைக்கும்’

என்பதும் அது.

‘இயமர மியம்பும்’

எனவே, ஒலிக்கும் என்பதாம்.

‘முரசிரங்கு முற்றம்’

என்றக்கால், இசைக்கும் என்பதாம். (53)

353. அவற்றுள்
இரங்கல் கழிந்த பொருட்டு மாகும்.
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 15:36:14(இந்திய நேரம்)