Primary tabs

கரம் பெற்றும் பெறாதும், ஏற்றவழி உகரம் பெற்றும் வரும்.
(எ-டு.) உண்குவ, தின்குவ எனவும்,
ஓடுவ, தாவுவ எனவும்,
உரிஞுவ, செருமுவ எனவும் வரும். உண்டனவல்ல, உண்டனவில்லை
எனப் பிற வாய்ப்பாட்டு மறையும் அறிக. (19)
அஃறிணை ஒருமைத் தெரிநிலை வினைமுற்று
219.
ஒன்றன் படர்க்கை த ற ட ஊர்ந்த
குன்றிய லுகரத் திறுதி யாகும்.
இஃது, ஒருமைவினை கூறுகின்றது.
(இ-ள்.) ஒன்றன் படர்க்கை - ஒன்றனை உணர்த்தும் படர்க்கை
வினையாவது, த ற ட ஊர்ந்த குன்றியலுகரத்து இறுதி ஆகும் - த ற,
ட என்னும் ஒற்றுக்களை ஊர்ந்து நின்ற குன்றிய லுகரத்தினை
ஈறாகவுடைய சொல்லாம், எ-று.
தகர உகரம் இறந்தகாலத்து வருங்கால் ‘க, ட, த, ற’க்கள் முன்
அகரம் பெற்றும், ஏனை எழுத்தின்முன் இகரமும் யகர உயிர்மெய்யும்
பெற்றும், யகர உயிர்மெய்யே பெற்றும் வரும்.
(எ-டு.) புக்கது, புக்கிலது; உண்டது, உண்டிலது; வந்தது, வந்திலது;
சென்றது, சென்றிலது எனவும், எஞ்சியது, தப்பியது எனவும் உரிஞியது,
நண்ணியது, பொருநியது, செருமியது, துன்னியது எனவும், போயது,
கூறியது, சொல்லியது, மேவியது, துள்ளியது எனவும் வரும்.
இனி, நில், கின்று என்பனற்றொடு நிகழ்காலத்தின்கண் அகரம்
பெற்று வரும்.
(எ-டு.) நடவாநின்றது, நடவாநின்றிலது; நடக்கின்றது, நடக்கின்றிலது,
உண்ணாநின்றது, உண்ணாநின்றிலது; உண்கின்றது, உண்கின்றிலது என
வரும்.
இனி, எதிர்காலத்தின்கண் உயிர்மெய்யான பகர வகரம் பெற்று,
உண்பது, செல்வது என வரும்.
றகர உகரம், ‘க, ட, த, ற’ என்பனவற்றின்முன் அன்னும் இன்னும்
பெற்றும், ஏனை எழுத்தின்முன் ‘இன்’ பெற்றும், அவ்வின்னின் னகரம்
தி

