தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   657


 

ரிந்தும் இறந்தகாலம் பற்றி வரும்.

(எ-டு.)  புக்கன்று,  புக்கின்று;  உண்டன்று, உண்டின்று; வந்தன்று,
வந்தின்று;  சென்றன்று,  சென்றின்று  என வரும். ‘கூயின்று, கூயிற்று,
போயின்று,  போயிற்று’  என  ஏனை  எழுத்தோடும்  ஒட்டிக்கொள்க.
‘வந்தின்று’  என்பது  இல்லினது லகரம் னகரமாய்த் திரிந்த எதிர்மறை
வினையாதல்,   வந்தில,   வந்திலன்,  வந்திலள்,  வந்திலர்  என்னும்
ஏனைப்பாற் சொல்லான் அறிக. இந்த றகர உகரம், ‘தாலி களைந்தன்று
மிலனே’  (புறம்.  77:7)  எனவும்,  ‘வியந்தன்று  மிழிந்தன்று மிலனே’
(புறம்.  77:10)  எனவும்  உயர்திணைக்  கண்ணும்  வந்ததால்  எனின்,
அவை   ‘களைந்தான்,   வியந்தான்,   இழிந்தான்’  என்பனவற்றிற்கு
மறையாய்க் ‘களைந்திலன், வியந்திலன், இழிந்திலன்’ என நிற்கின்றவை
‘களைந்தன்றுமிலன்,  வியந்தன்றுமிலன், இழிந்தன்றுமிலன்’ என முற்று
வினைத் திரிசொல்லாய் நின்றன.
 

இனி,  டகர உகரம் மூன்று காலத்திற்கும் உரிய வினைக்குறிப்பாய்க்
குண்டுகட்டு, குறுந்தாட்டு என வரும்.
 

மேல்   குறிப்பினைத் தெரிநிலைவினையொடு மாட்டெறிப ஆதலின்,
இத்தெரிநிலைவினையுள்  டகர  உகர  ஈறு  இல்லது  கண்டு  ஆண்டு
மாட்டேறு ஏலாது என ஈண்டுக் கூறினாரென உணர்க.
 

கிளவியாக்கத்துத்   திணையும்  பாலும் அறிவிப்பான் இவ்வீறுகளை
விதந்தோதினார்;  ஈண்டு இவை இன்ன இடம்பற்றி உணர்த்துமென்றார்.
(20)
 

அஃறிணை வினைமுற்றின் தொகை
 

220.

பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அம்மூ விரண்டும் அஃறிணை யவ்வே.
 

இது, விரிந்தது தொகுத்து அஃறிணைக்கு உரிமை கூறுகின்றது.
     

(இ-ள்.) பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த - பன்மை
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:47:34(இந்திய நேரம்)