Primary tabs

ய், தின்பாய் என ஏவற்பொருண்மையும் உணர்த்தும்.
இனி, ‘ஐய! சிறிதென்னை ஊக்கி’ (கலி. 37: 15) எனவும்,
‘ஈதன்மாட்டொத்தி பெரும!’ (கலி. 86:22) எனவுங் ககரமுந் தகரமும்
பெற்ற இகரம் ஏவல் கண்ணியே நிற்கும். இதற்குப் ‘பிரிந்துறை சூழாதி’
(கலி. 18:2) என்பது மறை.
இனி, ஐகார ஈறு அம் ஈற்றுக்கு உரிய எழுத்துப் பெற்றும், ஆய் ஈறு
ஆம் ஈற்றுக்கு உரிய எழுத்துப் பெற்றும், மூன்றுகாலத்தும் வரும்.
(எ-டு.) உண்டனை, உண்ணாநின்றனை, உண்பை, உண்குவை,
கரியை எனவும்; உண்டாய், உண்ணாநின்றாய், உண்பாய், காரியாய்
எனவும் வரும். உரிஞினை. உரிஞினாய் என ஏனை எழுத்தோடும்
ஒட்டுக. (உரை என்றால், ஏவல் கண்ணுமாறும் உணர்க) உண்ணாநிற்றி
என்பது, எதிர்காலத்துப் பிறந்த நிகழ்காலம். இனி, உண்டிலை
உண்ணாநின்றிலை, உண்ணலை எனவும், உண்டிலாய், உண்ணாநின்றிலாய், உண்ணலாய் எனவும் மறை வரும். (26)
முன்னிலைப் பன்மை வினைமுற்று
226.
இது, முன்னிலைப் பன்மை கூறுகின்றது.
(இ-ள்.) இர் ஈர் மின் என வரூஉம் மூன்றும்-இர், ஈர், மின் என்று
சொல்ல வருகின்ற மூன்று ஈற்றுச் சொல்லும், பல்லோர் மருங்கினும்
பலவற்று மருங்கினும்-உயர்திணைக்கண் பல்லோரிடத்தினும்
அஃறிணைக்கண் பலவற்றிடத்தினும், சொல் ஓர் அனைய என்மனார்
புலவர் - சொல்லுதலை ஒருதன்மை

