தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   666


 

மயாக உடைய என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று.
 

இர் ஈறு அர்  ஈற்றுக்கு உரிய  எழுத்தும்,  ஈர் ஈறு ஆர் ஈற்றுக்கு
உரிய எழுத்தும் பெற்று மூன்றுகாலத்தும் வரும்.
 

(எ-டு.)   உண்டனிர்,   உண்ணாநின்றனிர்,  உண்பிர்,  உண்குவிர்
எனவும்,   உண்டீர்,  உண்ணாநின்றீர்,  உண்பீர்,  உண்குவீர்  எனவும்
வரும். மின் பிற எழுத்துப் பெறாது, ஏற்றுழி உகரம்பெற்று எதிர்காலத்து
வரும்.
 

(எ-டு.)   ‘உண்மின்  கள்ளே,  அடுமின்  சோறே’   (பதிற். 18-1),
உரிஞுமின்   என  வரும்.  இதற்கு, உண்பீர், அடுவீர், உரிஞுவீர் என
விரிக்க. ‘கானம்  கடத்திர்  எனக்  கேட்பின்’  (கலி.  7:3)  என்புழிக்
கடவாநின்றீர் என நிகழ்காலத்துத் தகரம் வந்தது. இஃது எதிர்காலத்தும்
வரும்.
 

இனி,  முன்னிலை வினைக்குறிப்பு, உயர்திணை வினைக்குறிப்பிற்கு
ஓதிய   பொருள்பற்றி  ஐயும்  ஆயும்  இருவும்  ஈரும் என  நான்கு
ஈற்றவாய்  கழலினை,  நாட்டை,  பொன்னன்னை, கரியை; கழலினாய்,
நாட்டாய்,    பொன்னன்னாய்,    கரியாய்;   கழலினிர்,   நாட்டினிர்,
பொன்னன்னிர்,  கரியிர்;  கழலினீர், நாட்டினீர், பொன்னன்னீர் கரியீர்
என  வரும்.  போறி என்பது போன்றனன், போன்றான் என்பது போல
வந்த    தெரிநிலைவினை.   இனி,   உண்டிலிர்,   உண்ணாநின்றிலிர்,
உண்ணலிர்;  உண்டிலீர். உண்ணாநின்றிலீர், உண்ணலீர்; உண்ணன்மின்
என மறை வரும்.
 

மேல் எச்ச  இயலுள்   ‘முன்னிலை   முன்னர்’   (451)  என்னுஞ்
சூத்திரத்தாற் பெற்ற முன்னிலைகளுள் மொழிக்கு
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 17:49:15(இந்திய நேரம்)