Primary tabs

இவர்கள் ஒருங்கு வந்திலரேனும் முடிவில் வந்து நிற்றலின், இது
முடிவு போயிற்று என்று கூறினானாதலின். இம்மூவர் என்றமையான்
பெயர் தொகை பெற்றதேனும் வந்தமையான் என்றதனான் வினையும்
தொகை பெற்று, அவ்வினையாற் கலியாணம் முடிந்தவாறும் உணர்க.
இம்முற்று அடுத்து வந்தனவும் செவ்வெண்ணாம்.
இனி, யாங் கண்ட பொழுது இம்மாடத்துமேல் நின்றானும்
இருந்தானும் கிடந்தானும் இவன் என முற்றுச்சொற்கண்ணும்
எண்ணும்மை வருதல் கொள்க.
பெயரெச்சத்தில் எண்ணிடைச்சொல் வாரா. (45)
எண்ணிடைச்சொற்கள் பிரிந்து சென்று ஒன்றுதல்
296.
ஒன்றுழி உடைய எண்ணினுட் பிரிந்தே.
இஃது, எண்ணிடைச்சொற்கள் பிரிந்து சென்று ஒன்றும் என்கின்றது.
என்றும் எனவும்
ஒடுவும்
தோன்றி-
என்றும் எனவும் ஒடுவும்
என்பன ஒருவழித் தோன்றி, எண்ணினுட்பிரிந்து ஒன்றுவழி உடைய
எண்ணினுட் பிறவழியும் பிரிந்து சென்று ஒன்றும் இடம் உடைய, எ-று.
(எ-டு.) ‘வினைபகை என்றிரண்டின் எச்சம்’ (குறள்.674)
‘கண்ணிமை
நொடியென’ (எழுத்.7) ‘பொருள்கருவி காலம் வினையிடனொடைந்தும்’
(குறள்.675) என்புழி, வினையென்று, பகையென்று, கண்ணிமையென,
நொடியென பொருளொடு கருவியொடு காலத்தொடு வினையொடு என்று
பிறவழிச் சென்று ஒன்றியவாறு காண்க.
ஒன்றுவழி உடைய என்றதனான், சொற்றொறும் நிற்றல் பெரும்
பான்மை. அஃது இக்காலத்து அரிது. (46)
இடைச்சொற்களுக்குப் பொருட் புறனடை
297.
அவ்வச் சொல்விற் கவையவை பொருளென
மெய்பெறக் கிளந்த இயல ஆயினும்
வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித்
திரிந்துவேறு படினும் தெரிந்தனர் கொளலே.
இஃது, எழுவகை இடைச்சொற்கும் பெருட்புறனடை கூறுகின்றது.
(இ-ள்.) அவ்வச்சொல்லிற்கு அவையவை பொருளென மெய்பெறக்
கிளந்த இயல ஆயினும் - முற்கூறிய இடைச்

