Primary tabs

து; எனத்
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு - என்று
முன்னுள்ளோர் கூறிய கூற்றினைப் பொருந்திய நெஞ்சுடனே;
காமக்கிழவன் உள்வழிப் படினும் - தலைவன் இருந்தவிடத்தே
தலைவி தானே செல்லினும்; தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும் -
மனவலியின்றிச் செல்வாமெனக் கூறும் நன்மொழியினைத்
தலைவிதானே கூறினும்; பொருள் தோன்றும் - அவை
அகப்பொருளாய்த் தோன்றும்; ஆவகை பிறவும்மன் பொருள்
தோன்றும் - அக்கூற்றின் கூறுபாட்டிலே பிற கூற்றுக்களும் மிகவும்
அகப்பொருளாய்த் தோன்றும் எ-று.
என்றது
தலைவிகூற்று. சிறுபான்மை வேறுபட்டு வருவனவற்றைக்
கற்புச்சிறப்ப நாண் துறந்தாலுங்குற்றம் இன்றென்றற்குச்
‘செயிர்தீ’ரென்றார்; ‘நன்மொழி’ யென்றார் கற்பிற் றிரியாமையின்;
அவை இன்னோரன்னவழி நெஞ்சொடுகிளத்தல் போல்வன. இவள்
கூற்றுத் தோழிக்குந் தலைவற்குமே தோன்றுவதென்க. மன்: ஆக்கம்,
இழிந்த பொருளும் உயரத்தோன்றலின்,
“மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங்காணேன் மாண்தக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோடீர் இலங்குவளை ஞெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.”
(குறுந்.31)
யாண்டுங் காணேனென அவனை வழிபட்டுக்
கூறினமையிற்
கற்பின்பாலதாய்த் தோழியுந் தலைவனும் பெண்டன்மை யிற்றிரியக்
கருதாது நன்குமதித்தவாறு காண்க.
“அருங்கடி யன்னை காவ னீவிப்
பெருங்கடை யிறந்து மன்றம் போகிப்
பகலே பலருங் காண நாண்விட்
டகல்வயற் படப்பை அவனூர் வினவிச்
சென்மோ வாழி தோழி பன்னாள்
கருவி வானம் பெய்யா தாயினும்
அருவி யார்க்கும் அயந்திகழ் சிலம்பின்
வான்றோய் மாமலை நாடனைச்
சான்றோ யல்லை யென்றனம் வரற்கே.”
(நற்.365)
“கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாடொறும்
பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி
யீங்கிவ ணுறைதலும் உய்குவ மாங்கே
எழுவினி வாழியென் நெஞ்சே முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேற் கட்டி நான்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நட்பே.”
(குறுந்.11)
இவை தோழிக்கும் நெஞ்சிற்குங் கூறியன.
“ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த
குறும்பி வல்சிப் பெருங்கை யேற்றை
தூங்குதோல் துதிய வள்ளுகிர் கதுவலின்
பாம்புமத னழியும் பானாட் கங்குலும்
அரிய அல்லமன் இகுளை பெரிய
கேழல் அட்ட பேழ்வா யேற்றை
பலாவமல் அடுக்கம் புலர ஈர்க்குங்
கழைநரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு
வாழை யோங்கிய தாழ்கண் அசும்பில்
படுகடுங் களிற்றின் வருத்தஞ் சொலிய
பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல்
விண்டோய் விடரகத் தியம்பும் அவர்நாட்டு
எண்ணரும் பிறங்கன் மானதர் மயங்காது
மின்னுவிடச் சிறிய வொதுங்கி மென்மெலத்
துளிதலைத் தலைஇய மணியே ரைம்பால்
சிறுபுறம் புதைய வாரிக் குரல்பிழியூஉ
நெறிகெட விலங்கிய நீயிர் இச்சுரம்
அறிதலும் அறிதிரோ என்னுநர்ப் பெறினே”
(அகம்.8)
என்னும் அகப்பா

