தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5382


 

டு   மென்று   தொழுது   காட்டினான்.   குறிக்கொளுங்   கூற்றான்
உரைத்தலிற் குறிப்பினு மென்றார். உதாரணம் வந்துழிக் காண்க.

ஒழுக்கத்துக்  களவினுள்நிகழ்ந்த  அருமையைப் புலம்பி அலமரல்
உள்ளமோடு     அளவிய    இடத்தும்    -    வணக்கஞ்செய்தும்
எதிர்மொழியாது    வினாயவழிப்   பிறராற்   கூற்று    நிகழ்ச்சியும்
எதிர்ப்பட்டுழி   எழுந்தொடுக்   கியுந்தான்   அக்காலத்து  ஒழுகும்
ஒழுக்கத்திடத்து  முன்னர்க்  களவுக்   காலத்து   நிகழ்ந்த  கூட்டத்
தருமையைத் தனித்துச் சுழலுதலையுடைய  உள்ளத்தோடே  உசாவிய
இடத்தும் தலைவற்குக் கூற்று நிகழும். 

உதாரணம் வந்துழிக்  காண்க. “கவவுக் கடுங்குரையள்” (குறுந்.132)
என்பது காட்டுவாரும் உளர்.

அந்தரத்து   எழுதிய  எழுத்தின்  மான  வந்த  குற்றம் வழிகெட
ஒழுகலும் (வந்த குற்றம் அந்தரத்து எழுதிய எழுத்தின் மான வழிகெட
ஒழுகுதலும்) - களவுக்காலத்து  உண்டாகிய பாவம் ஆகாயத்தெழுதிய
எழுந்து வழிகெடுமாறு  போல  வழிகெடும்படி பிராயச்சித்தஞ் செய்து
 ஒழுகுதற்கண்ணும்:

அது   முன்புபோலக்   குற்றஞ்சான்ற  பொருளை வழுவமைத்துக்
கொள்ளாது குற்றமென்றே கருதிக் கடிதலாம்.

“பொய்யற்ற கேள்வியால் புரையோரைப் படர்ந்துநீ
மையற்ற படிவத்தால்”                     (கலி.15)

என்றவழி  ‘மையற்ற   படிவம்’  எனத்  தலைவன்  கூறியதனைத்
தோழி கூறியவாறு காண்க.

அழியல்  அஞ்சல்  என்று  ஆஇரு பொருளினும் - வந்த குற்றம்
நினக்கு உளதென்று  அழியலெனவும்  எனக்குள   தென்று   அஞ்ச
லெனவுஞ் சொல்லப்படும் அவ்விருபொருண்மைக் கண்ணும்:

இவை  இரண்டாகக் கொள்ளின் முப்பத்துநான்காமாதலின் இருவர்
குற்றமுங்   குற்றமென  ஒன்றாக்கியது.  தெய்வத்தினாதலின்   ஏதம்
பயவாதென்றான்.

“யாயும் ஞாயும் யாரா

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:45:24(இந்திய நேரம்)