Primary tabs


கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே.”
(குறுந்.40)
இது நம்மானன்றி நெஞ்சந்
தம்மில் தாங் கலத்தலின்
தெய்வத்தான் ஆயிற்றெனத் தெருட்டியது.
தான் அவட் பிழைத்த பருவத்தானும் - அங்ஙனந் தெய்வத்தினான்
ஆயிற்றேனுங் குற்றமேயன்றோ என உட்கொண்ட அவட்கு யான்
காதன் மிகுதியாற் புணர்ச்சிவேண்ட
என் குறிப்பிற் கேற்ப
ஒழுகினையாகலின் நினக்கொரு குற்றமின்றென்று தான் பிழைத்த
பருவமுணர்த்தும் இடத்தும்: கூற்று நிகழும்.
உ-ம்:
“நகைநீ கேளாய் தோழி தகைபெற
நன்னாட் படராத் தொன்னிலை முயக்கமொடு
நாணிழுக் குற்றமை யறிகுநர் போல
நாங்கண் டனையநங் கேள்வர்
தாங்கண் டனைய நாமென் றோரே.”
இதனுள் நன்னாள் வேண்டுமென்னாது கூடிய கூட்டத்துள் தங்கி
நாணுச் சுருங்கி வேட்கை பெருகிய நம்மினும் ஆற்றாராயினார்போல
நாங் குறித்துழி வந்தொழுகிய தலைவர் தாங்குறித்தனவே
செய்தனமென நமக்குத் தவறின்மை
கூறினாரெனத் தோழிக்குத்
தலைவி கூறியவழித் தலைவன் தன் பிழைப்புக் கூறியவாறு காண்க.
நோன்மையும்
பெருமையும் மெய்கொள அருளிய பன்னல் சான்ற
வாயிலொடு பொருந்தித் தன்னின் ஆகிய தகுதிக் கண்ணும்) தன்னின்
ஆகிய நோன்மையும் பெருமையும் மெய்கொள
- தலைவனான்
உளதாகிய பொறையையுங் கல்வி முதலிய பெருமையையும் உடைய
மகவைத் தலைவி தன் வயிற்றகத்தே
கொள்கையினானே; பன்னல்
சான்ற வாயிலொடு பொருந்தி அருளிய
தகுதிக்கண்ணும் -
வேதத்தை ஆராய்தல் அமைந்த அந்தணரொடு கூடி