தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5384


 

இருத்தற்குச் செய்யத்தகுஞ் சடங்குகளைச் செய்த தகுதிப் பாட்டின்
கண்ணும்:

‘தன்னினாகிய மெய்’ - சிகருப்பம். அவிப்பலிகொள்ளும் அங்கியங்
கடவுட்கும்   அது  கொடுக்குந்   தலைவர்க்கும்   இடையே  நின்று
கொடுப் பித்தலின் அந்தணரை வாயிலென்றார்.

“ஆற்றல் சான்ற தாமே யன்றியும்
நோற்றோர் மன்றநங் கேளிரவர் தகைமை
வட்டிகைப் படூஉந் திட்ட மேய்ப்ப
அரிமயி ரொழுகுநின் அவ்வயி றருளி
மறைநவில் ஒழுக்கஞ் செய்தும் என்றனர்
துனிதீர் கிளவிநம் தவத்தினும்
நனிவாய்த் தனவால் முனிவர்தஞ் சொல்லே.”

இதனுள் நந்தலைவ ரேயன்றிச் சுற்றத்தாரும் நோற்று ஒரு கருப்பந்
தங்கிய   நினது   வயிற்றைக்கண்டு   உவந்து  அதற்கேற்ற  சடங்கு
செய்து மென்றா ரெனவும், முற்காலத்து  நாங்கேட்ப  நமக்குக்  கூறிய
முனிவர்  சொல்லும்   உண்மையாயிற்றெனவுங்   கூறியவாறு  காண்க.
தலைவன் கூற்று வந்துழிக் காண்க.

புதல்வற் பயந்த புனிறுசேர் பொழுதின் - அங்ஙனஞ் சிறப்பெய்திய
புதல்வனைப் பெற்ற ஈன்றணுமை சேர்ந்த காலத்தே:

நெய் அணி  மயக்கம் புரிந்தோள் நோக்கி - சுற்றக் குழாத்துடனே
வாலாமை  வரைதலின்றி  எண்ணெயாடும்   மயக்கத்தை   விரும்பிய
தலைவியை முகமனாகக் கூறுதலைக் குறித்து:

ஐயர் பாங்கினும் - முனிவர் மாட்டும்:

அமரர்ச் சுட்டியும் - தேவர்கள் புதல்வனைப் பாதுகாத்தலைக்
கருதியும்:

செய்பெருஞ்  சிறப்பொடு   சேர்தற்  கண்ணும்  -  அக்காலத்துச்
செய்யும் பெரிய சிறப்புக்களைக் குறித்த மனத்தோடே சென்று சார்தற்
கண்ணும்:

சிறப்பாவன பிறந்த புதல்வன் முகங்காண்டலும் ஐம்படை பூட்டலும்
பெயரிடுதலும் முதலியனவும்,  எல்லா    முனிவர்க்குந்   தேவர்க்கும்
அந்தணர்க்குங்  கொடுத்தலும்,  சேர்தல்  கூறவே, கருப்பம் முதிர்ந்த
காலத்துத் தலைவன் பிறரொடு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:45:48(இந்திய நேரம்)