Primary tabs
-
சொல்லதிகாரம் - மூலம்உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்

செவிலியோடு ஒக்கும்
137 அம்பலும் அலரும் களவு வெளிப்படுத்தலின்
அங்கு அதன் முதல்வன் கிழவன் ஆகும்138 'வெளிப்பட வரைதல், படாமை வரைதல், என்று
ஆயிரண்டு' என்ப 'வரைதல் ஆறே'139 'வெளிப்படைதானே கற்பினோடு ஒப்பினும்,
ஞாங்கர்க் கிளந்த மூன்று பொருளாக
வரையாது பிரிதல் கிழவோற்கு இல்லை.140 கற்பு எனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்கு உரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே.141 கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே,
புணர்ந்து உடன் போகிய காலையான.142 மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே143 'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்,
ஐயர் யாத்தனர் கரணம்' என்ப.144 கரணத்தின் அமைந்து முடிந்த காலை,
நெஞ்சுதளை அவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும்;


