தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-moolam

  • ஓலை எண் : 

  • சொல்லதிகாரம் - மூலம்
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   250


    அன்னர் ஆயினும், இழிந்தோர்க்கு இல்லை.

    630 'புறக் காழனவே புல்' என மொழிப

    631 'அகக் காழனவே மரம்' என மொழிப

    632 'தோடே, மடலே, ஓலை, என்றா;
    ஏடே, இதழே, பாளை, என்றா;
    ஈர்க்கே, குலை, என நேர்ந்தன பிறவும்,
    புல்லொடு வரும்' எனச் சொல்லினர் புலவர்.

    633 'இலையே, முறியே தளிரே, கோடே,
    சினையே, குழையே, பூவே, அரும்பே,
    நனை உள்ளுறுத்த அனையவை எல்லாம்
    மரனொடு வரூஉம் கிளவி' என்ப.

    634 காயே, பழமே, தோலே, செதிளே,
    வீழோடு, என்று ஆங்கு அவையும் அன்ன.

    635 நிலம், தீ, நீர், வளி, விசும்போடு, ஐந்தும்
    கலந்த மயக்கம் உலகம் ஆதலின்,
    இரு திணை ஐம் பால் இயல் நெறி வழாஅமைத்
    திரிவு இல் சொல்லொடு தழாஅல் வேண்டும்.

    636 மரபு நிலை திரிதல் செய்யுட்கு இல்லை,
    மரபு வழிப்பட்ட சொல்லினானே.

    637 மரபு நிலை திரியின், பிறிது பிறிது ஆகும்.

    638 வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே,
    நிகழ்ச்சி அவர்கட்டு ஆகலான.

    639 மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,
    உரை படு நூல்தாம் இரு வகை இயல
    முதலும் வழியும் என நுதலிய நெறியின.

    640 வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
    முனைவன் கண்டது முதல் நூல் ஆகும்

    641 வழி எனப்படுவது அதன் வழித்து ஆகும்

    642 வழியின் நெறியே நால் வகைத்து ஆகும்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 13:38:44(இந்திய நேரம்)