Primary tabs


பதுதோன்ற, ''ஒழுக்கமுடையார்
வாய்ச்சொல்'' ''வாய்'' என்பது
தீச்சொல்அறியாமையாகிய சிறப்புணர நின்றது.
''அவற்றைக் கேட்க''
என்பதுகுறிப்பெச்சம். எனைத்தானும் நல்லவை
கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். ஒருவன் சிறிதாயினும் உறுதிப்
பொருள்களைக் கேட்க, அக்கேள்வி அத்துணையாயினும் நிறைந்த
பெருமையைத் தரும் ஆகலான். ''எனைத்து'' , ''அனைத்து''
என்பன
கேட்கும் பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி
மழைத்துளிபோல வந்து ஈண்டி எல்லா அறிவுகளையும்
உள
ஆக்கலின், ''சிறிது'' என்று இகழற்க என்பதாம். பிழைத்துணர்ந்தும்
பேதைமை சொல்லார் இழைத்துணர்ந் தீண்டிய கேள்வி யவர். பிறழ
உணர்ந்த வழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ் சொற்களைச்
சொல்லார்,
பொருள்களைத் தாமும் நுண்ணியதாக ஆராய்ந்தறிந்து
அதன்மேலும்
ஈண்டிய கேள்வியினை உடையார். ''பிழைப்ப''
என்பது
திரிந்து நின்றது. பேதைமை:
ஆகுபெயர். ஈண்டுதல்: பலவாற்றான்
வந்து நிறைதல். பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்து,
அறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தார் தாமத குணத்தான் மயங்கினர்
ஆயினும், அவ்வாறல்லது சொல்லார் என்பதாம். இவை நான்கு
பாட்டானும் கேட்டார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது. கேட்பினுங்
கேளாத்
தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி. தம் புலமாய
ஓசை மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம் தன்மையவேயாம்,
கேள்வியால் துளைக்கப்படாத செவிகள். ஏகாரம் தேற்றத்தின்கண்
வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையின்
''கேளாத்தகைய''
என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற்
கேள்வியைக் கருவியாக்கியும்
கூறினார். ''பழைய து

