த்த செவ்வாய் வல்எயிறு இலங்க
இடிக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
தொடுத்த பாசத்துத் தொல்பதி நரகரைப்
புடைத்துஉணும் பூதமும் பொருந்தா தாயிடும்
மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும்
ஆயிரம் கண்ணோன் விழாக்கால் கொள்கென
வச்சிரக் கோட்டத்து மணம்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்றுஉரி போர்த்த இடியுறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை
முரசுகடி இகூஉம் முதுக்குடிப் பிறந்தோன்
திருவிழை மூதூர் வாழ்கென்று ஏத்தி
வானமும் மாரி பொழிக மன்னவன்
கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக
தீவகச் சாந்தி செய்தரு நல்நாள்
ஆயிரம் கண்ணோன் தன்னோடு ஆங்குஉள
நால்வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
பால்வேறு தேவரும் இப்பதிப் படர்ந்து
மன்னன் கரிகால் வளவ