தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Ma.nimeekalai

  • ஓலை எண் : 

  • மணிமேகலை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   536

    ன்நீங் கியநாள்
    இந்நகர் போல்வதுஓர் இயல்பினது ஆகிப்
    பொன்னகர் வறிதாப் போதுவர் என்பது
    தொல்நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்
    தோரண வீதியும் தோம்அறு கோட்டியும்
    பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்
    பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்
    காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
    பூக்கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
    பத்தி வேதிகைப் பசும்பொன் தூணத்து
    முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்
    விழவுமலி மூதூர் வீதியும் மன்றமும்
    பழமணல் மாற்றுமின் புதுமணல் பரப்புமின்
    கதலிகைக் கொடியும் காழ்ஊன்று விலோதமும்
    மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்
    நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
    பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம்ஈ றாக
    வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 09:58:32(இந்திய நேரம்)