தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Ma.nimeekalai

  • ஓலை எண் : 

  • மணிமேகலை
    உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
    ஓலை எண் :   537

    ஆறுஅறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
    தண்மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
    புண்ணிய நல்உரை அறிவீர் பொருந்துமின்
    ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்
    பட்டி மண்டபத்துப் பாங்குஅறிந்து ஏறுமின்
    பற்றா மாக்கள் தம்முடன் ஆயினும்
    செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
    வெண்மணல் குன்றமும் விரிபூஞ் சோலையும்
    தண்மணல் துருத்தியும் தாழ்பூந் துறைகளும்
    தேவரும் மக்களும் ஒத்துஉடன் திரிதரும்
    நால்ஏழ் நாளினும் நன்குஅறிந் தீர்என
    ஒளிறுவாள் மறவரும் தேரும் மாவும்
    களிறும் சூழ்தரக் கண்முரசு இயம்பிப்
    பசியும் பிணியும் பகையும் நீங்கி
    வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி
    அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்குஎன்.
    விழாவறை காதை முற்றிற்று.
     

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 10-09-2016 09:58:44(இந்திய நேரம்)