றங்கு கோதையர்
மழலையும் யாழுமே மலிந்த மாடமே.
11.
காவியுங் குவளையு நெகிழ்ந்து கள்ளுமிழ்
ஆவியுண் டடர்த்ததே னகத்து மங்கையர்
நாவியுங் குழம்புமுண் ணகில நற்றவம்
மேவிநின் றவரையு மெலிய விம்முமே.
12.
வானிலங் கருவிய வரையு முல்லைவாய்த்
தேனிலங் கருவிய திணையுந் தேறல்சேர்
பானலங் கழனியுங் கடலும் பாங்கணி
நானிலங் கலந்துபொன் னரலு நாடதே.
13.
முன்றி லெங்கு முருகயர் பாணியும்
சென்று வீழரு வித்திர ளோசையும்
வென்றி வேழ முழக்கொடு கூடிவான்
ஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம்.
14.
ஏறு கொண்டெறி யும்பணைக் கோவலர்
கூறு கொண்டெழு கொன்றையந் தீங்குழல்
காறு கொண்டவர் கம்பலை யென்றிவை
மாறு கொண்டு சிலம்புமொர் மாடெ