Primary tabs
-
சூளாமணி மாலைஉ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்

34.கலவர்தஞ் சிறுபறை யிசையிற் கைவினைப்
புலவர்தேம் பிழிமகிழ் குரவை பொங்குமே
குலவுகோற் கோவலர் கொன்றைத் தீங்குழல்
உலவுநீ ளசுணமா வுறங்கு மென்பவே.
35.மாக்கொடி மாணையு மௌவற் பந்தரும்
கார்க்கொடி முல்லையுங் கலந்த மல்லிகைப்
பூக்கொடிப் பொதும்பரும் பொன்ன ஞாழலும்
தூக்கடி கமழ்ந்துதான் றுறக்க மொத்ததே.
முதலாவது நாட்டுச் சருக்க முற்றும்.2. நகரச் சருக்கம்
36.சொன்னநீர் வளமைத் தாய சுரமைநாட் டகணி சார்ந்து
மன்னன்வீற் றிருந்து வைக நூலவர் வகுக்கப் பட்ட
பொன்னவிர் புரிசை வேலிப் போதன மென்ப துண்டோர்
நன்னகர் நாக லோக நகுவதொத் தினிய தொன்றே
37.சங்கமேய் தரங்க வேலைத் தடங்கடற் பொய்கை பூத்த
அங்கண்மா ஞால மென்னுந் தாமரை யகத்து ளாங்கே
செங்கண்மால் சுரமை யென்னுந் தேம்பொகுட் டகத்து வைகு
நங்கையோர் படிவங் கொண்ட நலத்ததந் நகர ம


