7. பகுத்தறிவு பகலவன்

பகுத்தறிவு பகலவன்

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

ஒரு நாடு சிறக்க வேண்டுமானால் அந்நாட்டில் பொருள்வளம், தொழில்வளம், இயற்கைவளம் முதலியன சிறந்திருக்க வேண்டும். இவற்றோடு மக்களின் நலமும் அறிவுவளமும் உயர்ந்து இருக்க வேண்டும். நல்ல அறிவில் சிறந்த மக்கள் வாழும் நாடு என்றைக்கும் மேன்மை நிலை அடையும். அவ்வகையில் மக்களை மேம்படுத்த வேண்டுமானால் அதற்கு அறிஞர்கள் தோன்ற வேண்டும். அந்த அறிஞர்கள் தன்னலங் கருதாது சமுதாய நோக்கோடு செயல்பட்டு மக்களை முன்னேற்ற வேண்டும். அவ்வகையில் தமிழ்நாட்டு மக்கள் பல்வேறு வழிகளில் முன்னேற தொண்டு செய்த தந்தை பெரியார் அவர்களை இப்பாடம் உங்களுக்கு அறிமுகம் செய்கின்றது.