பகுத்தறிவு பகலவன்
பயிற்சி - 4
Exercise 4
1. பெரியார் ஏன் ஈரோட்டை விட்டு இடம் பெயர்ந்தார்?
அவரின் தந்தையார் விதித்த பல கட்டுப்பாடுகள் தாங்காமல் அவர் இடம் பெயர்ந்தார்.
2. மக்களிடம் காணும் ஏற்றத் தாழ்வுகளை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பெரியாருக்கு ஏற்படுத்திய ஊர் ஏது?
மக்களிடம் காணும் ஏற்றத் தாழ்வுகளை நீக்க வேண்டும் என்ற எண்ணத்தைப் பெரியாருக்கு ஏற்படுத்திய ஊர் காசி.
3. பெரியார் எத்தனை வகையானப் பதவிகளை ஒரே நேரத்தில் வகித்தார்?
பெரியார் 28 வகையானப் பதவிகளை ஒரே நேரத்தில் வகித்தார்.
4. பெரியாரைப் பற்றி அண்ணா எவ்வாறு கூறுகிறார்?
சாக்ரடீஸ், லெனின், பிராட்லா, பர்னாட்ஷா, ரூசோ முதலிய பேரறிஞர்களின் ஓர் உருவம் என்று பெரியாரை அண்ணா பராட்டுகிறார்.
5. பெரியாரைப் பற்றி வ.ரா அவர்களின் கருத்து என்ன?
செய்ய வேண்டும் என்று தோன்றியதை தயங்காமல் செய்யும் தன்மை பெரியாரிடம் மட்டுமே விளங்கியச் சிறந்த குணம்.
6. பெரியாரைப் பற்றி திரு.வி.க. வின் கருத்து என்ன?
உரிமை வேட்கை, அஞ்சாமை முதலியன பெரியாரின் தோற்றத்திலேயே பொலிதல் வெள்ளிடைமலை என்று பெரியாரை திரு.வி.க. போற்றுகிறார்.
7. பெரியாரைப் பற்றி வ.உ.சியின் கருத்து என்ன?
பெரியார் எல்லாத் தலைவர்களையும் விட மிகச் சிறந்த தியாகி என்று பெரியாரைப் போற்றுகிறார் வ.உ.சி.
8. பெரியாரோடு பழகிய அறிஞர்கள் சிலரைக் குறிப்பிடுக.
அயோத்திதாசர், இராஜாஜி, காந்தியடிகள், அண்ணா ஆகியோர் பெரியாரோடு பழகிய அறிஞர்கள் ஆவர்.
9. அறிஞர் அண்ணா நிறைவேற்றிய பெரியாரின் கொள்கைள் யாவை?
சுயமரியாதைத் திருமணம், தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம், இருமொழிக் கொள்கை முதலானவை அறிஞர் அண்ணா நிறைவேற்றிய பெரியாரின் கொள்கைகள் ஆகும்.
10. வைக்கம் போராட்டம் குறித்து எழுதுக.
தற்போது கேரள மாநிலத்தில் உள்ள வைக்கம் என்னும் ஊரில் உள்ள கோயிலிலும் தெருக்களிலும் அனைத்துப் பிரிவினரும் செல்லலாம் என்ற வெற்றியைப் பெற்றுத் தந்து பெரியார் வைக்கம் வீரர் என்று பாராட்டப் பெற்றார்.