பகுத்தறிவு பகலவன்
பாடஅறிமுகம்
Introduction to Lesson

பெரியார் என்று உலக மக்களால் அன்போடு அழைக்கப் பெறுபவர் ஈ.வெ.இராமசாமி ஆவார். இவர் தந்தை பெரியார் என்றும் அழைக்கப் பெறுகிறார். தமிழ்ச் சமுதாயத்தில் அவர் காலத்தில் பல அறியாமைகள் இருந்தன. மக்கள் பல அடிப்படைகளில் பிரிந்தும் இழிந்தும் இருந்தனர். இந்தப் பிரிவுகள், இழிவுகள் காரணமாக மக்களில் ஏற்றத் தாழ்வுநிலை இருந்தது. அந்த ஏற்றத் தாழ்வுநிலை மாறி அனைத்து மக்களும் ஒரே சமநிலையினர் என்ற பொதுநிலையை ஏற்படுத்தியவர் பெரியார் ஆவார். அவரது வாழ்க்கை, அவரின் சமுதாயச் செயல்பாடுகள் குறித்து இப்பாடத்தின் வழி நீங்கள் அறியலாம்.