பகுத்தறிவு பகலவன்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. பெரியாரின் பெற்றோர்கள் -------------, ---------------.
பெரியாரின் பெற்றோர்கள் சின்னத் தாயம்மை, வெங்கடப்பர்.
2. பெரியார் பிறந்த ஊர் ------------.
பெரியார் பிறந்த ஊர் ஈரோடு.
3. பெரியார் ------------ கல்வி வரை படித்தார்.
பெரியார் திண்ணைக் கல்வி வரை படித்தார்.
4. பெரியாரின் மனைவி பெயர் -------------------.
பெரியாரின் மனைவி பெயர் நாகம்மையார்.
5. பெரியார், கோயில் தெருக்களில் அனைவரும் நுழைவதற்காக போராட்டம் நடத்திய ஊர் --------------.
பெரியார், கோயில் தெருக்களில் அனைவரும் நுழைவதற்காக போராட்டம் நடத்திய ஊர் வைக்கம்.
6. வைக்கம் வீரர் என அழைக்கப் பெறுபவர் -------------.
வைக்கம் வீரர் என அழைக்கப் பெறுபவர் பெரியார்.
7. பெரியார் நடத்திய இதழ்கள் -------, --------.
பெரியார் நடத்திய இதழ்கள் குடியரசு, புரட்சி.
8. பெரியார் ------------ மக்களிடம் இருக்கும் குறையாகக் கருதினார்.
பெரியார் மூடநம்பிக்கையை மக்களிடம் இருக்கும் குறையாகக் கருதினார்.
9. இந்தியாவில் மதுவிலக்குப் போராட்டம் ஏற்படக் காரணமானவர்கள் ------------, --------.
இந்தியாவில் மதுவிலக்குப் போராட்டம் ஏற்படக் காரணமானவர்கள் நாகம்மை, சின்னத்தாய்.
10. பெரியார் தொடங்கிய அமைப்பின் பெயர் -------------.
பெரியார் தொடங்கிய அமைப்பின் பெயர் திராவிடர் கழகம்.