பகுத்தறிவு பகலவன்
பயிற்சி - 3
Exercise 3
1. பெரியார் பிறந்த ஈரோடு எங்குள்ளது?
அ) கர்நாடகம்
ஆ) தமிழ்நாடு
இ) கேரளம்
ஈ) இலங்கை
ஆ) தமிழ்நாடு
2. ஒரு நாட்டு மக்களுக்கு வேண்டப்பெறும் தலையாயப் பற்று எது?
அ) சமுதாயம்
ஆ) அருள் பற்று
இ) மொழி
ஈ) சமயம்
இ) மொழி
3. உழைப்பாளி அடிமையானதற்குக் காரணம் எது என்று பெரியார் கருதுகிறார்?
அ) பாவம்
ஆ) மூட நம்பிக்கை
இ) கடவுள்
ஈ) சமுதாயம்
ஆ) மூடநம்பிக்கை
4. சமுதாய வாழ்க்கையில் எது இன்றிமையாதது என்று பெரியார் சொல்கிறார்?
அ) ஒழுக்கம்
ஆ) செல்வம்
இ) பதவி
ஈ) கல்வி
அ) ஒழுக்கம்
5. பெரியாரின் இல்லத்தில் தங்கிய தேசத் தலைவர் யார்?
அ) இராஜாஜி
ஆ) காந்தியடிகள்
இ) அயோத்திதாசர்
ஈ) வ.ரா.
ஆ) காந்தியடிகள்
6. ஆண்களின் குடிப்பழக்கத்தால் மிகவும் துன்பம் அடைவோர் யார்?
அ) மனைவியர்
ஆ) பெண்கள்
இ) குழந்தைகள்
ஈ) தந்தையர்
அ) மனைவியர்
7. வைக்கம் வீரர் எனப் போற்றப் பெறுபவர் யார்?
அ) காந்தியடிகள்
ஆ) நேரு
இ) இராசாராம் மோகன்ராய்
ஈ) பெரியார்
ஈ) பெரியார்
8. உலகத் தத்துவ அறிஞர்களின் ஓர்உருவம் என்று அறிஞர் அண்ணாவால் போற்றப்பெறுபவர் யார்?
அ) உரூசோ
ஆ) சாக்ரடீசு
இ) காந்தியடிகள்
ஈ) பெரியார்
ஈ) பெரியார்
9. பெரியார் கொள்கைகளைப் பின்பற்றியத் தலையாய அறிஞர் பெருமகன் யார்?
அ) அறிஞர் அண்ணா
ஆ) அயோத்திதாசர்
இ) திரு.வி.க.
ஈ) வ.ரா.
அ) அறிஞர் அண்ணா
10. பகுத்தறிவு பகலவன் எனப் புகழப்பெற்றவர் யார்?
அ) அறிஞர் அண்ணா
ஆ) அயோத்திதாசர்
இ) பெரியார்
ஈ) சாக்ரடீசு
இ) பெரியார்