7. பகுத்தறிவு பகலவன்

பகுத்தறிவு பகலவன்

மையக்கருத்து
Central Idea


தமிழ்ச் சமுதாயம் அறிவில் சிறந்த சமுதாயமாக வளர்ந்து உயர வேண்டும் என்பதற்காக ஒரு இனப் போராளியாக வாழ்ந்தவர் தந்தை பெரியார். பெண் விடுதலை, பகுத்தறிவு, சமுதாய விடுதலை, சுயமரியாதை முதலியவைப் பற்றிப் பல புரட்சிக் கருத்துகளை வழங்கியவர்; மனிதர்களை மனிதர்களாக்கத் தொண்டு புரிந்தவர். மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு என்று மானுடத்திற்கு ஏற்றம் தந்தவர் பெரியார்.

Father Periyar lived as a great fighter for the glory of the Tamil race and to make it grow into a knowledgeable one. Liberation of women and of the society, rationalism, self-respect, were his great objectives in life. He laboured hard to make people realize their worth. He insisted that self-respect and knowledge would make man a honourable being.