10. சித்தன்ன வாசல்

சித்தன்ன வாசல்

பயிற்சி - 4
Exercise 4


IV கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒரு வரியில் விடை தரவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Answer the following questions in a line each: For answers, press the answer button.
1.  சித்தன்ன வாசலுக்குச் செல்லும் வழி என்ன?

சென்னையில் இருந்து திருச்சி வழியாக புதுக்கோட்டைச் சென்று சித்தன்ன வாசலுக்குச் செல்லலாம்.

2.  குகைக் கோயில் என்றால் என்ன?

குகைக் கோயில் என்பது மலையைக் குடைந்து அமைக்கப் பெற்றதாகும்.

3.  குகைக் கோயில் மண்டபத்தில் இடதுபுறத்தில் உள்ள ஓவியம் எது?

குகைக் கோயில் மண்டபத்தில் இடதுபுறத்தில் உள்ள ஓவியம் அரசர், அரசி ஓவியம் ஆகும்.

4.  குகைக்கோயில் மண்டபத்தில் வலது புறத்தில் உள்ள ஓவியம் எது?

குகைக்கோயில் மண்டபத்தில் வலதுபுறத்தில் உள்ள ஓவியம் ஆடல் பெண் ஓவியம் ஆகும்.

5.  அரசர் ஓவியத்தின் சிறப்பு என்ன?

அரசரின் மணிமுடியில் வைரக்கற்களும், காதில் மீன்வடிவ அணியும் உள்ளன.

6.  ஆடல் பெண் ஓவியம் எதனுடன் ஒப்பிடத்தக்கது?

ஆடல் பெண் ஓவியம் அசந்தா ஓவியத்தோடு ஒப்பிடத்தக்கது.

7.  தாமரைக் குளம் ஓவியம் குறித்து எழுதுக.

தாமரைக் குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளது. அதில் தாமரை மலர்கள், மொட்டுகள், இலைகள் உள்ளன. ஒரு மனிதன் தாமரை மலர்களைப் பறிக்கின்றான்.

8.  ஏழடிப் பட்டம் என்பது எது?

இயற்கையாகவே அமைந்த குகையில் பத்துப் பதினைந்து பேர் படுத்து உறங்கும் கல்லாலானப் படுக்கைகள் கொண்ட இந்த இடத்திற்குப் பெயர் ஏழடிப் பட்டம்.

9.  நவச்சுனை என்ற பெயர் வரக்காரணம் என்ன?

சுற்றிலும் நாவல் மரங்கள் உள்ளதால் இதற்கு நாவல் சுனை அல்லது நவச்சுனை என்று பெயர் வந்தது.

10.  நாட்குறிப்பில் எத்தகையச் செய்திகளை எழுதலாம்?

பயணக் குறிப்புகள், முக்கிய நிகழ்ச்சிகள், நினைவில் கொள்ள வேண்டிய நாட்கள், தகவல்கள் ஆகியவற்றை நாட்குறிப்பில் எழுதலாம்.