சித்தன்ன வாசல்
பயிற்சி - 2
Exercise 2
II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1. மலைக்கோட்டைத் தொடர்வண்டி ---------, ---------- ஆகிய இடங்களை இணைக்கின்றது.
மலைக்கோட்டைத் தொடர்வண்டி திருச்சி, சென்னை ஆகிய இடங்களை இணைக்கின்றது.
2. சித்தன்ன வாசலின் சிறப்பு---------.
சித்தன்ன வாசலின் சிறப்பு குகைக்கோயில், இயற்கை ஓவியங்கள்.
3. குடைவரைக் கோயில் என்பது -----------யைக் குடைந்து அமைக்கப் பெறுவது.
குடைவரைக் கோயில் என்பது மலையின் அடிப்பகுதியைக் குடைந்து அமைக்கப் பெறுவது.
4. நாட்குறிப்பு எழுதியவரின் நண்பர் பெயர் ------------.
நாட்குறிப்பு எழுதியவரின் நண்பர் பெயர் சரவணன்.
5. சித்தன்ன வாசல் கல்வெட்டில் உள்ள அரசன் ------------.
சித்தன்ன வாசல் கல்வெட்டில் உள்ள அரசன் அவனிபாத சேகரன்.
6. ----------- ஓவியம் இந்திய நாட்டின் இன்றியமையாத ஓவியம் எனப்பெறுகிறது.
சித்தன்ன வாசல் ஆடல் பெண் ஓவியம் இந்திய நாட்டின் இன்றியமையாத ஓவியம் எனப்பெறுகிறது.
7. மன்னன் மீன் வடிவ அணியை ---------- அணிந்திருந்தான்.
மன்னன் மீன் வடிவ அணியை காதில் அணிந்திருந்தான்.
8. ஏழடிப் பட்டம் ------------ அமைந்தக் குகை.
ஏழடிப் பட்டம் இயற்கையாக அமைந்தக் குகை.
9. ஏழடிப் பட்டத்தில் ---------- உள்ளன.
ஏழடிப் பட்டத்தில் படுக்கைப் போன்ற அமைப்புகள் உள்ளன
10. ஏழடிப் பட்டத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ---------- உள்ளது.
ஏழடிப் பட்டத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நவச்சுனை உள்ளது.