3. காப்பிய இலக்கியம்

சிலப்பதிகாரம்

பயிற்சி - 2
Exercise 2


II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும். விடை காண விடைத் தொடர்பை அழுத்தவும்.
Find the right words to fill in the blanks: For answers, press the answer button.
1.  சுண்ணம் என்பது ---------- ஆகும்.

சுண்ணம் என்பது வண்ணப்பொடி ஆகும்.

2.  கோவலன் பிறந்த ஊர் --------- ஆகும்.

கோவலன் பிறந்த ஊர் பூம்புகார் ஆகும்.

3.  சிலப்பதிகாரம் -------- காண்டங்களை உடையது.

சிலப்பதிகாரம் மூன்று காண்டங்களை உடையது.

4.  முத்தமிழ்க் காப்பியம் என்று அழைக்கப்பெறும் காப்பியம் -------- ஆகும்.

முத்தமிழ்க் காப்பியம் என்று அழைக்கப்பெறும் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும்

5.  இளங்கோவடிகள் ----------- சமயத்தைச் சார்ந்தவர்.

இளங்கோவடிகள் சமண சமயத்தைச் சார்ந்தவர்.

6.  ‘அமளி’ என்பதன் பொருள் ------------.

‘அமளி’ என்பதன் பொருள் இருக்கை (படுக்கை).

7.  உரோகிணி என்பது ஒரு ------- ஆகும்.

உரோகிணி என்பது ஒரு விண்மீன் ஆகும்.

8.  கோவலன் -------- குலத்தைச் சார்ந்தவன்.

கோவலன் வணிகக் குலத்தைச் சார்ந்தவன்.

9.  கோவலன் கண்ணகி திருமணம் செய்வித்தவன் மாமுது --------- ஆவான்.

கோவலன் கண்ணகி திருமணம் செய்வித்தவன் மாமுது பார்ப்பான் ஆவான்.

10.  ‘பூம்புகாரின்’ மற்றொரு பெயர் ------------

'பூம்புகாரின்’ மற்றொரு பெயர் காவிரிப்பூம்பட்டினம்.